ஓட்டுப் போடாத நரேஷ் குப்தா!
சென்னை:
எல்லோரையும் சாப்பிடச் சொல்லி விட்டு, தான் சாப்பிடாத கதையாகி விட்டது தமிழகதலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவின் நிலை.
சட்டசபைத் தேர்தலை அமைதியாக நடத்தி முடிந்து ஓய்ந்துள்ளது தேர்தல் ஆணையம்.திமுக, அதிமுக முதல் குட்டிக் கட்சிகள் வரை அத்தனை அரசியல் கட்சிகளும்ஏகப்பட்ட புகார்களையும், குற்றச் சாட்டுக்களையும் ஏவுகணை போல் தினசரிகுவித்தும் கூட சற்றும் அசராமல், தனது டிரேட் மார்க் சுறுசுறுப்போடு தேர்தல்பணிகளில் தீவிரமாக இருந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நரேஷ் குப்தா.
தேர்தலை அமைதியாக, பாதுகாப்பாக நடத்த வேண்டும், வாக்காளர்கள் அச்சமின்றிஓட்டுப் போட வேண்டும் என்று தீவிர அக்கறை காட்டிய நரேஷ் குப்தா, கடைசியில்ஓட்டுப் போட முடியவில்லை.
இதுகுறித்து குப்தாவிடம் கேட்டபோது, தேர்தல் ஆணையத்தின் பொறுப்புஅதிகாரியாக இருப்பதால் எந்தக் கட்சிக்கும் ஓட்டுப் போடக் கூடாது என்று முடிவுசெய்திருந்தேன். அதனால்தான் ஓட்டுப் போடவில்லை.
எனது பணிகளில் பாரபட்சம் இருப்பதாக அரசியல் கட்சிகள் கருதினால் என்னைமாற்றும்படி கோரலாம் என்றார்.
இந்தக் கோரிக்கையை குப்தா பலமுறை வைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications