15 ஆண்டுகளில் அதிகபட்ச வாக்கு பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழக சட்டமன்றத் தேர்தலில் 65 சதவீதவாக்குகள் பதிவாகியுள்ளன.

நேற்று நடந்த சட்டசபைத் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுகடந்த 15 ஆண்டுகளில் அதிகபட்ச அளவாகும்.

அதிகபட்சமாக மதுரை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தலா 73 சதவீத வாக்குகள்வரை பதிவாகியுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டியை உள்ளடக்கிய தேனிமாவட்டத்தில்தான் குறைந்தபட்சமாக 57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஆண்டிப்பட்டி தொகுதியில் 65 சதவீத வாக்குகளும், திமுக தலைவர் கருணாநதிபோட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில் 62 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

நடிகர் விஜயகாந்த் போட்டியிட்ட விருத்தாச்சலம் தொகுதியில் 71 சதவீத வாக்குகள்பதிவாகியுள்ளன.

ஸ்டாலின் தொகுதியான ஆயிரம் விளக்கில் 60 சதவீதமும், ஓ.பன்னீர் செல்வத்தின்பெரியகுளத்தில் 63 சதவீதம் பதிவாகின.

திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் துறைமுகம் தொகுதியில் 57 சதவீதமும்,ஆற்காடு வீராசாமியின் அண்ணா நகர் தொகுதியில் 58 சதவீத வாக்குகளும்பதிவாகியுள்ளன.

சென்னையின் பிற தொகுதிகளான ராயபுரத்தில் 69 சதவீதமும், ஆர்.கே.நகரில் 65சதவீதமும், பூங்கா நகரில் 62 சதவீதமும், பெரம்பூரில் 59 சதவீதமும், எழும்பூரில் 58சதவீதமும், தி.நகரில் 55 சதவீதமும்,

திருவல்லிக்கேணியில் 55 சதவீதமும், மைலாப்பூரில் 63 சதவீதமும்,சைதாப்பேட்டையில் 65 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னையைப் பொறுத்தவரை புரசைவாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக 71சதவீத வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தின் மிகப் பெரிய தொகுதியான வில்லிவாக்கத்தில் 61 சதவீத வாக்குகள்பதிவாகின. கடந்த தேர்தலை விட இது 20 சதவீதம் கூடுதலாகும். இத்தொகுதியில் 9.5லட்சம் வாக்காளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது பெரிய தொகுதியான தாம்பரத்தில் 65 சதவீத வாக்குகள் பதிவாகின.

இன்று பிற்பகல் வாக்கில் அனைத்து மாவட்டங்களிலும் பதிவான வாக்குகள் குறித்தசரியான புள்ளிவிவரம் கிடைக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+