அடுத்த தேர்தலில் காமராஜர் ஆட்சி: கிருஷ்ணசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அடுத்த தேர்தலில் காமராஜர் ஆட்சியை அமைக்க முயற்சிப்போம் என்று தமிழககாங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,சட்டசபைத் தேர்தலில் திக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவுதெரிவித்துள்ளனர். ஓட்டு எண்ணிக்கையின் இறுதியில் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கும்.
230 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம். திமுக தனித்து ஆட்சி அமைக்கும்.
இத் தேர்தலில் விஜயகாந்த் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. அவர் ஒரு அரசியல்சக்தியாகவும் வர முடியாது. தேர்தலுக்குப் பின் கட்சி இருந்தாலே பெரிய விஷயம்.
அடுத்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை, காமராஜர் ஆட்சியை அமைப்பது குறித்துமுயற்சித்துப் பார்ப்போம் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications