நாளை காலை சரியாக 8 மணிக்கு ...!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வியாழக்கிழமை(நாளை) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. முற்பகல் 11 மணி வாக்கில் முதல்முடிவு தெரிய வரும்.

3 மணி நேரத்திற்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து அனைத்துத் தொகுதிகளின்முடிவுகளும் தெரிந்துவிடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

234 தொகுதிகளுக்கும் கடந்த 8ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள்அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள்எண்ணப்படவுள்ள 82 மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

அடுக்கி வைக்கப்படும் வாக்குப் பதிவு மின்னணு எந்திரங்கள்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வெளியே மத்தியபோலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மாநில போலீஸாருக்கு(நம் ஊர் போலீஸைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை) அனுமதி தரப்படவில்லை.

அவர்கள் கட்டடத்திற்கு வெளியில்தான் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. வாக்குஎண்ணும் மையங்களின் உட்புறத்தில் மத்திய போலீஸாரும், வெளியே பிரதானவாசல்களில் மாநில போலீஸார், ஆயுதப் படை போலீஸார் உள்ளிட்டோர்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பாதுகாப்புப் பணியில் மோப்ப நாய்

வாக்கு எண்ணும் மையங்களில் ரகசிய கேமராக்களும் பொருத்தப்பட்டுகண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மோப்ப நாய்ப் படைகளும் சோதனையில் ஈடுபட்டுள்ளன. வாக்கு எண்ணும் நபர்கள்,கட்சிகளின் ஏஜென்டுகள் தவிர யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் விஜயகாந்த், ஸ்டாலின்உள்ளிட்ட 2,586 வேட்பாளர்களின் தலையெழுத்து நாளை மாலைக்குள் தெரிந்துவிடும். இதில் 1,222 பேர் சுயேச்சைகள். 160 பேர் பெண்கள்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் லத்திகா சரண்

காலை 8 மணிக்குத் தொடங்கும் வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் ஓட்டுக்கள்எண்ணப்படும். பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவானவாக்குகள் எண்ணப்படும்.

சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடக்கும் குயீன் மேரிஸ் கல்லூரி, லயோலாகல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், பிரசிடெண்சி கல்லூரி உள்ளிட்ட இடங்களைஆணையர் லத்திகா சரண் நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைபலப்படுத்தினார்.

பாண்டிச்சேரியிலும்..

அதே போல பாண்டிச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்லாம் மாநில சட்டமன்றத் தேர்தலின் வாக்குகளும் நாளை எண்ணப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+