கூவாகத்தில் அரவாணிகள் கொண்டாட்டம்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் அரவாணிகளுக்கு தாலி கட்டும்நிகழ்ச்சியும் அழகிப் போட்டியும் கோலாகலத்துடன் நடந்தேறியது.
![]() |
கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் அரவானுக்கு ஆலயம் உள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா விமரிசையாக நடைபெறும்.இந்த விழாவில் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான அரவாணிகள் கலந்துகொண்டு வழிபடுவர்.
இந்த ஆண்டுத் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது.கோவில் பூசாரி அரவாணிகளுக்கு தாலி கட்டினார்.
![]() |
பட்டுச்சேலை, கழுத்தில் மாலையுடன் அரவாணிகள் வரிசையாக நின்று பக்திப்பரவசத்துடன் தாலி கட்டிக் கொண்டனர்.
இரவு முழுவதும் அரவாணிகள் சந்தோஷத்துடன் கூத்தாடி தங்களது திருமணத்தைகொண்டாடி மகிழ்ந்தனர்.
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் விழாவை முன்னிட்டு கூவாகம் கிராமம் முழுவதுமஅரவாணிகள் மயமாகவே உள்ளது.
![]() |
அரவாணிகளுக்கென அழகிப் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் ஈரோட்டைச் சேர்ந்தரஞ்சிதா மிஸ் கூவாகம்-2006 ஆகத் தேர்வு செய்யப்பட்டார். தமிழகம் தவிர மும்பை,பெங்களூர், ஆந்திராவில் இருந்தும் ஏராளமான அரவாணிகள் வந்து குவிந்துள்ளனர்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை அரவாணிகள் அனைவரும் கலந்து கொண்டபிரமாண்ட ஊர்வலம் விழுப்புரத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அரவாணிகள்கண்ணைப் பறிக்கும் வகையில் கலர் கலரான உடையுடன், கையில் சிவப்பு நிறகுடையுடன் படு கலக்கலாக நடந்து சென்றனர்.
![]() |
ஊர்வலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முடிந்தது. பின்னர் ஆட்சித்தலைவரை சந்தித்த அரவாணிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திமனு ஒன்றைக் கொடுத்தனர்.
அரவாண் களப்பலி:
இந் நிலையில் இன்று அரவாண் களப்பலி நிகழ்ச்சி நடந்தது. அரவாணிகள் தாங்கள்கட்டிக் கொண்ட தாலிகளை அறுத்தெறிந்து ஒப்பாரி வைத்து அழுதனர்.
இரவு முழுவதும் அரவாணிகள் திருமண கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இன்றுகாலை அரவாண் களப்பலி நிகழ்ச்சி நடந்தது. இதில் அரவாணிகள் தாங்கள் கட்டிக்கொண்ட தாலிகளை அறுத்தெறிந்தனர்.
![]() |
பின்னர் அனைவரும் கட்டிப் பிடித்து ஒப்பாரி வைத்து அழுதனர். இன்றுடன் சித்திரைத்திருவிழா நிறைவு பெற்றது.
அரவாணிகளைக் காண ஏராளமான சுத்துப்பட்டு கிராம இளைஞர்களும் கூவாகத்தில்கூடியுள்ளனர்.

















Click it and Unblock the Notifications