புதிய அரசை வரவேற்க கோட்டை ரெடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகம் புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. புதிய அரசு வருகிற 12 அல்லது 13ம் தேதி பதவியேற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபைத் தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. பிற்பகல் 2மணிக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் புதிய அரசை அமைக்கப் போவது யார் என்பது தெரிந்து விடும்.

புதிய அரசை வரவேற்கும் வகையில் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்கள்உள்ள புனித ஜார்ஜ் கோட்டை புத்தம் புதிதாக காட்சி தருகிறது. அனைத்து அறைகளும்சீரமைக்கப்பட்டு புது வண்ணம் பூசப்பட்டுள்ளது. சட்டசபை வளாகத்திலும் சீரமைப்புப்பணிகள் நடைபெற்று புதுப் பொலிவுடன் காணப்படுகிறது.

புதிய அரசு பதவியேற்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசின் பொதுத்துறைமேற்கொள்ளும்.

கூட்டணி அரசு, சிக்கல் இருந்தால் அதையெல்லாம் பிரச்சனை இல்லாமல் கடந்தால் புதியஅரசு வருகிற 12 அல்லது 13ம் தேதி பதவியேற்கக் கூடும் என்று தெரிகிறது. பதவியேற்புவிழா ஆளுநர் மாளிகை அல்லது சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்நடைபெறக் கூடும்.

இதற்காக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தை தமிழக அரசு 12ம் தேதி முதல்18ம் தேதி வரை முன் பதிவு செய்து வைத்துள்ளது. ஜெயலலிதாவுக்கு மிகவும் ராசியானஅரங்கம் இது என்பது நினைவிருக்கலாம்.

நாளை வாக்கு எண்ணிக்கை முடிந்து டிவுகள் அறிவிக்கப்பட்டதும், ஒவ்வொருஎம்.எல்.ஏவுக்கும் உரிய வெற்றிச் சான்றிதழை தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாஅனுப்பி வைப்பார். அதன் நகல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.

இதைத் தொடர்ந்து தற்போதைய 12வது சட்டசபையைக் கலைக்கும் உத்தரவுவெளியிடப்படும். 13வது சட்டசபையை அமைக்கும் உத்தரவு வெளியிடப்படும்.

இதைத் தொடர்ந்து ஆளுநர் பர்னாலா புதிய அரசு தொடர்பான மற்ற நடவடிக்கைகளைதொடங்குவார்.

பெரும்பான்மை உள்ள கட்சியை ஆட்சி அமைக்க பர்னாலா அழைப்பு விடுப்பார். அதன்பின்னர் புதிய அரசு பதவியேற்கும். அதன் பின்னர் புதிய முதல்வரின் ஒப்புதலோடு தற்காலிகசபாநாயகர் நியமிக்கப்படுவார்.

அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். பின்னர் அனைத்து புதியஉறுப்பினர்களுக்கும் தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

அதன் பின்னர் சபாநாயகர் தேர்தல் நடைபெறும். துணை சபாநாயகரும் அப்போதே தேர்வுசெய்யப்படுவார். புதிய அரசு பதவியேற்ற ஒரு வாரத்தில் சட்டசபை கூடும்.

ஆளுநர் உரையுடன் தொடங்கும் இந்தக் கூட்டத் தொடரில் புதிய அரசின் பட்ஜெட் தாக்கல்செய்யப்படும்.

இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாநிலஅரசின் அனைத்துத் திட்டப் பணிகளும் ஆட்டோமேட்டிக்காக தொடங்கி தொடர்ந்துநடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+