திமுக கோட்டையில் அதிமுக!!
சென்னை:
சென்னை நகரில் உள்ள 14 தொகுதிகளில் 8 தொகுதிகளை அதிமுககைப்பற்றியுள்ளது. இதன் மூலம் திமுகவின் கோட்டை என்று கூறப்படும்சென்னையில் முதல் முறையாக அதிமுக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
சென்னை நகர தொகுதிகளில் திமுகவின் ஆதிக்கம் எப்போதுமே அதிகம். ஆனால்இம்முறை இந் நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.திமுகவின் வலிமையான தொகுதிகளை அதிமுக கைப்பற்றி தோல்வியிலும் சிறியஆறுதலைப் பெற்றுள்ளது.
ராயபுரம், ஆர்.கே.நகர் ஆகியவை அதிமுக பலம் பெற்றவை. ஆனால், பூங்கா நகர்,தியாகராய நகர், திருவல்லிக்கேணி, மையிலாப்பூர், சைதாப்பேட்டை, புரசைவாக்கம்ஆகிய தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பதர் சையத், கடந்தநாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்விஅடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தயாரித்த கருணாநிதியின் நெருங்கியநண்பரான நாகநாதனை தோற்கடித்துள்ளார்.
அதே போல மைலாப்பூரில் நெப்போலியனைத் தோற்கடித்துள்ளார் அதிமுக நடிகர்எஸ்.வி.சேகர்.












Click it and Unblock the Notifications