திமுக கூட்டணி பெரும் வெற்றி-13ம் தேதி கருணாநிதி முதல்வராக பதவியேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து திமுக தலைவர்கருணாநிதி மீண்டும் முதல்வராகப் பதவியேற்கிறார். நாளை அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோருகிறார். 13ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்.

சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.ஆனாலும் 118 இடங்களுக்குக் குறைவாகப் பெற்றுள"ள திமுகவால் தனித்து ஆட்சிஅமைக்க முடியாத நிலை உள்ளது.

இதனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்கவுள்ளது திமுக.

திமுகவின் வெற்றியைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்திற்கு வந்த கருணாநிதிக்குகூட்டணித் தலைவர்கள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

அல்லவை அகல வேண்டும், நல்லவை கிடைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள்விரும்பியதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அத்தனை திட்டங்கைளும் படிப்படியாகநிறைவேற்றப்படும். அதிகவின் தங்கத் தாலி திட்டத்தையும் நாங்கள் தடுக்கவில்லை,மறுக்கவில்லை.

திமுக அரசில் ஏழைப் பெண்களுக்கு திருமண உதவியாக ரூ. 15,000 வழங்கும்போதுதங்கத் தாலியையும் அவர்கள் வந்து கொடுக்கலாம்.

தனி ஆட்சியா, கூட்டணி ஆட்சியா என்பதை விரைவில் தோழைமைக் கட்சித்தலைவர்களைசந்தித்துப் பேசிய பின்னர் விரிவாக தெரிவிக்கிறேன்.

(தனி ஆட்சி எனில் கூட்டணிக் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவளிக்கும்)

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட அத்தனை நல்ல திட்டங்களும் மீண்டும்கொண்டு வரப்படும். கடற்கரை கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில்வைப்போம்.

கள்ளுக் கடைகள் மீண்டும் திறக்கப்படாது என்றார் கருணாநிதி.

தொடர்ந்து 7 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வென்றுள்ள கருணாநிதி,ஐந்தாவது முறையாக மீண்டும் முதல்வராகவுள்ளார்.

நாளை ஆளுநர் பர்னாலாவை சந்திக்கும் கருணாநிதி ஆட்சியமைக்க உரிமைகோருவார்.

கூட்டணி ஆட்சி இல்லை- தயாநிதி:

இதற்கிடையே திமுக தனித்தே ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் கூறியுள்ளார்.

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை வெளியில் இருந்து பெற திமுக முடிவு செய்துள்ளது.இதனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

இன்றும் நாளையும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசனைநடத்தவுள்ளார்.

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்:

இதற்கிடையே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏக்கள் நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடி கருணாநிதியை முதல்வர் பதவிக்குத்தேர்வு செய்யவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+