கருணாநிதிக்கு பிரதமர், ரஜினி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழகத்திலும், மேற்கு வங்கம் மற்றும் கேரளத்தில் திமுக, இடதுசாரிக் கட்சிகளுக்குக் கிடைத்துள்ள தேர்தல்வெற்றி மதசார்பின்மைக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலையில் இருந்த நிலையில் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசினார்மன்மோகன் சிங். அப்போது அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுடனும் பிரதமர் தொலைபேசியில் பேசிவாழ்த்துத் தெரிவித்தார்.
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய பிரதமர், கருணாநிதிக்கும் புத்ததேவுக்கும் எனது வாழ்த்துக்களைத்தெரிவித்தேன். அவர்களது வெற்றி நாட்டின் மதசார்பின்மைக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி என்றார்.
ரஜினி வாழ்த்து:
இந் நிலையில் தேர்தலில் வென்ற கருணாநிதிக்கு நடிகர் ரஜினி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகஅவர் அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த வெற்றி கலைஞரின் பழுத்த அரசியல் அனுபவத்துக்குக் கிடைத்துள்ளவெற்றி என்று ரஜினி அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications