மே.வங்கம், கேரளத்தில் இடதுசாரிகள் வெற்றி:ரேபரேலியில் சோனியா வெற்றி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இடது சாரிக் கூட்டணி பெரும் வெற்றிபெற்றுள்ளது.

அஸ்ஸாமில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இடைத் தேர்தலில் போட்டியிட்ட சோனியா காந்தி சுமார் 4லடசம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 232ல் இடதுசாரிக் கூட்டணி வென்று ஆட்சியை 7வதுமுறையாக தக்க வைத்து உலக சாதனை படைத்துள்ளது.

கேரளத்தில் மொத்தமுள்ள 140 இடங்களில் இடதுசாரிக் கூட்டணிக்கு 95 இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சியில்இருந்த காங்கிரஸ் கூட்டணிக்கு 42 இடங்களே கிடைத்துள்ளன. இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சியைஇழக்கிறது.

அஸ்ஸாமில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமுள்ள 126 இடங்களில் சுமார் 48 இடங்களைகாங்கிரசம், 20 இடங்களை அஸ்ஸாம் கன பரிஷத் கட்சியும் வென்றுள்ளன. பாஜக 12 இடங்களில்வென்றுள்ளது.

மற்ற கட்சிகள் மீதமுள்ள இடங்களைப் பிடித்துள்ளன. இதனால் ஆட்சியை தக்க வைக்க சிறிய கட்சிகளின்ஆதரவை காங்கிரஸ் முழுமையாகப் பெற்றாக வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+