திமுகவை கைவிட்ட சென்னை-பாமகவுக்கும் வேட்டு வைத்த கேப்டன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுகவை சென்னை கைவிட்டுவிட்டது.

இம்முறை திமுக வெறும் 128 இடங்களில் தான் போட்டியிட்டது. மற்ற இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்குவிட்டுத் தந்தது. இதனால் 96 சதவீத வெற்றியைப் பெற்றால் தான் 118 இடங்களில் வென்று தனித்துஆட்சியமைக்க முடியும் என்ற சூழலுக்கு திமுக தள்ளப்பட்டது.

ஆனால், திமுகவுக்கு சென்னையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

திமுகவின் கோட்டை என்று அழைக்கப்படும் சென்னை நகரில் உள்ள 14தொகுதிகளில் 7 தொகுதிகளை அதிமுக கைப்பற்றிவிட்டது. இதனால் திமுக மிகவும்எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை.

பாமகவின் சரிவு: விளையாடிய கேப்டன்!

அதே போல பாமக பெல்ட் எனப்படும் வட மாவட்டங்களில் மிக நம்பிக்கையுடன்போட்டியிட்ட திமுகவுக்கு பல இடங்களில் தோல்வியே கிடைத்துள்ளது. பாமகவின்ஓட்டு வங்கி அப்படியே இருந்தாலும் அதற்குக் கிடைக்கும் மற்ற வாக்குகள்கிடைக்கவில்லை. இதனால் அதன் செல்வாக்கு வெகுவாகவே குறைந்துள்ளது.

இதனால் அக் கட்சியால் வழக்கம்போல் அதிக இடங்களில் வெல்ல முடியவில்லை.இது பாமகவை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த்தின் புலிப்பாய்ச்சலும், விடுதலைச் சிறுத்தைகளும் ஓட்டை மாற்றிப் போட்டதும்தான் இந்தசரிவுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

வட மாவட்டங்களில் வெற்றி பெற வேண்டுமானால் பாமகவுடன் கூட்டணி வைத்தேஆக வேண்டிய நிலையில் முக்கிய கட்சிகளை வைத்திருக்கிறது பாமக. அந்தஅளவுக்கு கட்டுக்கோப்பாக காப்பாற்றப்பட்டு வந்த பாமகவின் வாக்கு வங்கியில்,தற்போது ஓட்டை விழுந்துள்ளது.

இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது விஜயகாந்த்தின் புதுக் கட்சிதான்.அதேபோல திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குகளும் முழுமையாகஅதிமுகவுக்குப் போய் விட்டதால் பாமகவின் செல்வாக்கில் சரிவு ஏற்பட்டு விட்டது.

வட மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர்,திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி 9 மாவட்டங்கள்மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள சேலம், நாமக்கல், கிழக்கில் உள்ள பெரம்பலூர்,கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமகவுக்கு செல்வாக்கு உள்ளது.

கடந்த தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 21 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆனால் இம்முறை 31 தொகுதிகளில் போட்டியிட்டு 17 தொகுதிகளில்மட்டுமே வெல்ல முடிந்துள்ளது.

வன்னியர்களின் கோட்டை எனப்படும் வட மாவட்டத் தொகுதிகள்பெரும்பாலானவற்றில் விஜயகாந்த் புகுந்துள்ளார். விருத்தாச்சலத்தில் வெற்றிக்கொடியை ஏற்றியுள்ள விஜயகாந்த் கட்சி, வட மாவட்டத்தின் பெரும்பாலானதொகுதிகளில் நல்ல வாக்குகளை பெற்று, பாமகவின் ஓட்டுக்களைப் பிரித்துள்ளது.

கூடவே, விடுதலைச் சிறுத்தைகளின் ஓட்டுக்கள் அப்படியே முழுதாக அதிமுகவுக்குப்போய் விட்டன. இதனால் பாமக தள்ளாடும் நிலை ஏற்பட்டு விட்டது.

வென்றுள்ள 17 தொகுதிகளில் சில தொகுதிகளைத் தவிர பெரும்பாலானதொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் பாமக ஜெயித்துள்ளதையும்நினைவில் கொள்ள வேண்டும். இது வன்னியர்களின் மனதிலிருந்து பாமக இறங்கத்தொடங்கியிருப்பாதகவே கருதப்பட வேண்டும்.

மேலும், கடந்த முறை போட்டியிட்ட பல வெற்றித் தொகுதிகளில் இம்முறை பாமகபோட்டியிட முடியவில்லை.

கூட்டணிக் கட்சிகளுக்குத் தர வேண்டும் என்று கூறி திமுக முக்கியமானதொகுதிகளைப் பறித்துக் கொண்டது. பூந்தமல்லி, செய்யாறு, அச்சரப்பாக்கம்,நாட்ராம்பள்ளி, வந்தவாசி, சங்கராபுரம், சேலம் 2, அந்தியூர், தாராபுரம், ஆண்டிமடம்,பெண்ணாகரம் ஆகிய தொகுதிகளை இம்முறை பாமக பெற முடியவில்லை. இதுவும்தோல்விக்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது.

மொத்தத்தில் தனது பிடியை நழுவ விட்டு விட்டது பாமக என்றே கூற வேண்டும்.இதை டாக்டர் ராமதாஸ் எப்படிச் சரி செய்யப் போகிறார், விஜயகாந்த்தின் எழுச்சியைஎப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+