ஜெவுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, அக்கட்சியின் புதிய எம்.எல்.ஏக்கள்அவரது வீட்டில் சந்தித்து ஆசி பெற்றனர்.

ஆட்சியைப் பறிகொடுத்துள்ள அதிமுக, சட்டசபைத் தேர்தலில் 61 தொகுதிகளில்வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் சென்னை நகரைச்சேர்ந்த 7 எம்.எல்.ஏக்களும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

அவர்களுடன் கோபிச்செட்டிப்பாளையம் எம்.எல்.ஏ. செங்கோட்டையனும் இருந்தார்.

அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஜெயலலிதா, சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.இதேபோல பிற மாவட்டங்களில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களும் சென்னை வந்துஜெயலலிதாவை சந்திக்கவுள்ளனர்.

தேர்தல் தோல்விக்குப் பின் ஜெயலலிதாவை நிருபர்களால் சந்திக்க முடியவில்லை.

ரகசியமாய் போயஸ் வந்த ஜெ:

நேற்று முன் தினத்தில் இருந்து மகாபலிபுரம் சாலையில் உள்ள தனது பண்ணைவீட்டில் தங்கியிருந்தார் ஜெயலலிதா. அவரை சந்திக்க நூற்றுக்கணக்கானபத்திரிக்கையாளர்கள் போயஸ் கார்டனில் குவிந்திருந்தனர்.

இந் நிலையில் திடீரென ஒரு டாடா சபாரி காரில் பின் சீட்டில் அமர்ந்தடி ஜெயலலிதாபோயஸ் கார்டனுக்குள் சென்றுவிட்டார்.

வழக்கமாக உடன் வரும் பாதுகாப்புப் படை கார்கள் வரவில்லை. இதனால் அந்தக்காரில் ஜெயலலிதா இருந்ததை நிருபர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+