கார்த்திக்- காலி பெருங்காய டப்பா!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தென் பாண்டிச் சிங்கம் என்று வர்ணிக்கப்பட்ட நடிகர் கார்த்திக் இந்தத் தேர்தல் மூலம்காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளார்.

முக்குலத்தோர் வாக்குகளைப் பிரிக்கப் போகிறார் என்று பெரிய அளவில்பேசப்பட்டவர் கார்த்திக். கலர் கலர் டிரஸ்ஸைப் போட்டு ஆடிப் பாடிக் கொண்டிருந்தகார்த்திக், திடீரென அரசியலில் குதித்தார்.

நேரடியாக பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவராக உயர்ந்தார்.

ஆரம்பத்திலேயே பெரிதாக சறுக்கி எழுந்தார் கார்த்திக். முதலில் கருணாநிதியைப்போய்ப் பார்த்தார். இதனால் அம்மாவின் கோபத்தை சம்பாதித்தார்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் ஆச்சு என்று கட்சியினர் தொடர்ந்துவலியுறுத்தி வந்ததால், வேறு வழியின்றி ஜெயலலிதாவைப் பார்க்க ஓலைஅனுப்பினார். ஆனால் அவர் கண்டுகொள்ளவே இல்லை. தொடர்ந்து கார்த்திக்தரப்பிலிருந்து வலியுறுத்தவல் வரவே கூப்பிட்டு, அவமானப்படுத்தி அனுப்பிவைத்தார் ஜெயலலிதா.

கடுப்பாகிப் போன கார்த்திக் தனது கட்சி 111 தொகுதிகளில் போட்டியிடும் என்றார்.ஆனால் அத்தனை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் கிடைக்காததால் 77 பேர் வரைநிறுத்தினார்.

அதிலும் பலரை அதிமுகவினர் கடத்திக் கொண்டு போய் விட்டதால் கடைசியில்தேறியது 62 பேர்தான். இதில் திருமங்கலம் தொகுதி வேட்பாளராகஅறிவிக்கப்பட்டவர் பரிதாபமாக தற்கொலையே செய்து கொண்டார்.

பெரும் தடுமாற்றத்துடன் நடை போட்டு வந்த கார்த்திக், பிரசாரத்திலும் பெரும்குழப்பம் விளைவித்தார். திடீர் திடீரென பிரசாரம் செய்வதும், அப்படியே மாயமாகிவிடுவதுமாக மிகப் பெரிய அரசியல் காமெடியனாக உருவானார் கார்த்திக்.

கார்த்திக்கின் போக்கைப் பார்த்த பெரிய கட்சிகள், இவராவது, நம்முடைய ஓட்டைப்பிரிக்கிறதாவது என்ற நனைப்புக்கு வந்து விட்டனர். அந்த அளவுக்கு படுகாமெடியாகவும், குழப்பமாகவும் இருந்தது கார்த்திக்கின் அரசியல்.

இப்படியாக தேர்தலில் போட்டியிட்ட கார்த்திக் கட்சி வேட்பாளர்களுக்கு ஒருதொகுதியில் கூட டெபாசிட் கிடைக்கவில்லை.

அத்தனை வேட்பாளர்களுக்கும் குறைந்தபட்சம் 400 ஓட்டு முதல் 2000, 3000ஓட்டுக்கள் வரைதான் கிடைத்தது. நல்ல வேளையாக கார்த்திக் எந்தத் தொகுதியிலும்போட்டியிடவில்லை. அவருக்கு முன்பே தெரியும் போலிருக்கிறது.

அதிமுக வாக்கு வங்கியை பெரிதாக பாதிப்பார் கார்த்திக் என்று கூறப்பட்டது. ஆனால்அப்படி எதுவும் நடக்கவில்லை. முக்குலத்தோர் அதிகம் உள்ள மாவட்டங்கள் மதுரை,தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, திருநெல்வேலி,தஞ்சாவூர் ஆகியவை. இங்கு மொத்தம் 58 தொகுதிகள் உள்ளன.

இதில் அதிமுகவுக்கு 22 தொகுதிகள் கிடைத்துள்ளன. வழக்கமாக இதைவிட இருமடங்கு இடங்கள் கிடைக்கும். ராமநாதபுரத்தில் மட்டும்தான் அதிமுகவுக்கு ஒருசீட்டும் கிடைக்கவில்லை.

ஆனால் அதற்கும் கூட கார்த்திக் காரணமல்ல என்பது இந்தப் பகுதிகளில் அவரதுகட்சி வாங்கிய ஓட்டுக்களே சாட்சி.

வாக்காளர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய சக்தியாகவே கார்த்திக் இந்தத்தேர்தலில் விளங்கினார் என்றுதான் கூற வேண்டும்.

கார்த்திக்கால் சாதிக்க முடிந்த ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், தென் மாவட்டமுக்குலத்தோர் சமூகத்தினரிடையே உங்களுக்காக, உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருபிரபலமான தலைவர் இருக்கிறார் என்ற எண்ணத்தை விதைத்ததுதான்.

வருங்காலத்தில் அரசியலை சீரியஸாக எடுத்துக் கொண்டு திட்டமிட்டு காய்நகர்த்தினால் மட்டுமே கார்த்திக் கவனிக்கப்படுவார்.

இல்லாவிட்டால் இவரும் இன்னொரு சுப்பிரமணியம் சுவாமி தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+