இலங்கை-தமிழர் பகுதியில் முப்படைத் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடுக்கடலில் நடந்த மோதலில் 67 பேர்கொல்லப்பட்டனர்.

இலங்கையில் மீண்டும் மோதல்கள் வெடித்துள்ள நிலையில் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நுழைந்தஇரு துவோரா ரக சிறிய கடற்படை தாக்குதல் படகுகள் மீது புலிகள் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் 2படகுகளும் வெடித்தச் சிதறின. அதிலிருந்த 17 கடற்படையினர் ாகல்லப்பட்டனர்.

அதே போல இந்தப் பகுதிக்குள் நுழைந்த கடற்படையின் பெரிய போர்க் கப்பலையும் புலிகள் சுற்றி வளைத்துத்தாக்கினர். இதையடுத்து அந்தக் கப்பல் தப்பி இந்தியப் பெருங்கடலில் சர்வதேச எல்லைக்குள் புகுந்துவிட்டது.

இந் நிலையில் கடற்படையினர் கூறுகையில், புலிகள் தரப்பில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. கடல்பகுதியில் நடந்த சண்டையில் 50 புலிகள் கொல்லப்பட்டனர் என்றனர்.

ஆனால், இதை புலிகள் மறுத்துள்ளனர். 4 புலிகள் மட்டுமே மோதலில் உயிரிழந்ததாக அந்த இயக்கம்கூறியுள்ளது.

இதற்கிடையே கிளிநொச்சி, முல்லைத் தீவு உள்ளிட்ட தமிழர் பகுதிகள் மீது இலங்கை ராணுவமும் விமானப்படையும் பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றன. அதே போல கடற்படையும் தமிழர் பகுதிகளை தொடர்ந்துதாக்கி வருகிறது.

இந் நிலையில் இலங்கை அமைதி முயற்சிகளில் இந்தியாவும் பங்கேற்க வேண்டும் என ஜப்பான் கோரிக்கைவிடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+