வைகோ வீடு மீது தாக்குதல்-போலீஸ் பாதுகாப்பு
சென்னை:
சென்னையில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வீட்டு அருகே சிலர்கார்களில் வந்து ரகளை செய்தனர். வீட்டின் மீதும் கல் வீசித் தாக்கினர். அந்தக் கும்பல்தாறுமாறாக கார்களை ஓட்டியதில் ஒரு பெண் படுகாயமடைந்தார்.
வைகோவின் வீடு சென்னை அண்ணா நகரில் உள்ளது. தேர்தல் முடிவுகள்அறிவிக்கப்பட்டு திமுக கூட்டணி ஆட்சியைப் பிடித்த செய்தி பரவியதும், சிலர்கார்களில் ஏறி வைகோவின் வீட்டுக்கு அருகே வந்தனர்.குடிபோதையில் இருந்த அவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்டுகிறது.
வைகோவின் வீடு அருகே ரகளையில் இறங்கிய அவர்கள் கார்களை அங்கும் இங்கும்வேகமாக ஓட்டி அப் பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தினர்.
வைகோவின் வீடு மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். அவர்களை காைேவின்வீட்டில் இருந்த மதிமுகவினர் பிடிக்க முயன்றனர்.
இதையடுத்து அந்தக் கும்பல் அங்கிருந்து வேகமாகத் தப்பிச் சென்றது.
அப்போது அக் கும்பல் கார்களை படுவேகமாக ஓட்டியதில் ஒரு பெண் மீது கார்மோதி அவர் படுகாயம் அடைந்தார். அப்பெண் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
இச் சம்பவம் குறித்து வைகோ உடனடியாக போலீஸில் தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனின் வீட்டுக்கும்முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications