மதுரை: கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

அழகர் பெருமான், கள்ளழகர் கோலம் பூண்டு மதுரை வைகை ஆற்றில் இறங்கியஇந்த நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.

மதுரையில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன்தொடங்கியது. முக்கிய வைபவங்களான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேம்,திருக்கல்யாணம் ஆகியவை நடந்து முடிந்த நிலையில் இன்று இன்னொரு முக்கியநிகழ்ச்சியான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அழகர் கோவிலிலிருந்து கள்ளர் வேடம் பூண்டு வந்த கள்ளழகர், இன்று காலை தங்கக்குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கினார். பச்சை பட்டு உடுத்தி இன்று காலை 6 மணிக்கு கள்ளழகர்பெருமான் வைகை ஆற்றில் இறங்கினார்.

இந்த நிகழ்ச்சியைக் காண மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கோவிந்தா கோவிந்தா என்றபக்தர்களின் பக்தி கோஷம் விண்ணை முட்ட வெகு விமரிசையாக நடந்தேறியது அழகர் ஆற்றில் இறங்கும்நிகழ்ச்சி.

மதுரையைச் சுற்றிலும் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில்குவிந்துள்ளதால் எங்கு நோக்கினும் ஜனக் கடலாக உள்ளது.

இதையொட்டி மதுரையில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+