அடுத்த சக்தி நான் தான்-விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருங்காலத்தில் தமிழக அரசியலில் மாபெரும் சக்தியாக தேசிய முற்போக்கு திராவிடகழகம் உருவெடுக்கும் என்று கட்சித் தலைவரும், நடிகருமான விஜயகாந்த்கூறியுள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதம்14ம் தேதி நாம் விதைத்த விதைக்கு இன்று அறுவடை நாள். நாம் கட்சிதொடங்கியபோது இவர்கள் என்ன அரசியல் நடத்தி விடப் போகிறார்கள் என்றுஎள்ளி நகையாடியவர்கள் ஏராளம். பல்வேறு னைகளிலிருந்தும் எதிர்ப்புக் கனைகள்.

நாம் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியபோது நம்மைப் பார்த்துஅனுதாபப்பட்டவர்கள் ஏராளம். இருப்பினும் நாம் நமது தனித்தன்மையைகாப்பதற்காக தமிழகத்திலேயே வேறு எந்தக் கட்சியும் செய்திடாத, செய்ய முன் வராதநிலையில் நமது கழகம் அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம்இறக்கியது.

நாம் தேர்தலில் எதிர் கொண்டவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர், பண பலமும்,ஆட்கள் பலமும், அதிகாரபலம் கொண்டவர்கள்.

நம்மைப் பொருத்தவரையில், நமது கழகம் 8 மாதமேயான தவழும் குழந்தைதான்.அந்தக் குழந்தைக்கு மக்கள் கொடுத்திருக்கும் எழுச்சியான வரவேற்பும், பேராதரவும்எங்கள் நெஞ்சங்களை நெகிழ வைக்கிறது.

நாம் தனித்துப் போட்டியிட்ட 234 தொகுதிகளிலும் கிடைத்திருக்கும் வாக்குகள் 28லட்சமாகும். மக்கள் மாபெரும் மாற்றத்தை வரவேற்கத் தயாராகி விட்டார்கள்என்பதற்கான சான்றுதான் இது.

எதிர்காலத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம்தான் தமிழகத்தின் மாபெரும்அரசியல் சக்தியாக மாறப் போகிறது என்பதற்கான அடையாளம்தான் இது.

அதற்கான அடித்தளம் இந்தத் தேர்தலில் இடப்பட்டுள்ளது. இது மக்கள் எங்களுக்குகொடுத்திருக்கும் அங்கீகாரம்.

முயன்றால் முடியாதது இல்லை என்ற வாதத்திற்கிணங்க, நமது கழக நிர்வாகிகளும்,தோழர்களும், தொண்டர்களும் தொடர்ந்து கழகப் பணிகளை ஆற்றி, வரவிருக்கும்உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெறுவார்கள் என நம்புகிறேன்.

தேர்தல் பணியில் இரவு பகலாக தங்கள் உயிரையும் பணயம் வைத்து வியர்வை சிந்திஉழைத்த கழக நிர்வாகிகளுக்கும், கழகத் தோழர்களுக்கும் பெருவாரியானவாக்குகளில் என்னை வெற்றி பெற வைத்த விருத்தாச்சலம் மற்றும் தமிழக வாக்காளப்பெருமக்களுக்கும், தாய்மார்களுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும்,இளைஞர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+