43ல் அதிமுக-50ல் திமுகவுக்கு கேப்டன் வேட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் 3 இடங்களில் திமுகவின் தோல்விக்குக் காரணமாக அமைந்துள்ளது விஜய்காந்தின் தேமுதிக.

சென்னையில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் திமுகவும் அதிமுகவும் தலா 7 இடங்களில் வென்றன. இதில்திருவல்லிக்கேணி, மைலாப்பூர், சைதாப்பேட்டையில் திமுகவின் தோல்விக்கு விஜய்காந்த் பிரித்த வாக்குகளேகாரணமாக அமைந்திருப்பது தெரிகிறது.

திருவல்லிக்கேணியில் அதிமுகவின் பதர்சயீத் திமுக வேட்பாளர் நாகநாதனை விட 2,776 வாக்கு வித்தியாசத்தில்வென்றார். இந்தத் தொகுதியில் தேமுதிக 4,834 வாக்குகள் வாங்கியுள்ளது.

அதே போல மைலாப்பூரில் அதிமுகவின் எஸ்.வி.சேகர் திமுக வேட்பாளர் நெப்போலியனை விட 1,667 வாக்குவித்தியாசத்தில் வென்றுள்ளது. இந்தத் தொகுதியில் தேமுதிக பெற்ற வாக்குகள் 7,441.

சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுகவின் செந்தமிழன் பாமக வேட்பாளரை விட 5,905 வாக்கு வித்தியாசத்தில்வென்றுள்ளார். இங்கு விஜய்காந்த் கட்சி 11,675 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதே போல திருத்தணியில் வெறும் 916 வாக்கு வித்தியாசத்தில் தான் பாமகவை வென்றுள்ளது அதிமுக. இங்குதேமுதிக 11,293 வாக்குகளை அள்ளியுள்ளது.

அதே போல கும்மிடிப்பூண்டி, அணைக்கட்டு ஆகிய தொகுதிகளில் தலா 229, 139 வாக்குகளில் தான்அதிமுகவிடம் பாமக தோற்றுள்ளது. இங்கு விஜய்காந்த் வாங்கியுள்ள ஓட்டு தலா 21,738 மற்றும் 7,278 ஆகும்.

திருச்செங்கோடு, மேட்டுப்பாளையம் ஆகிய தொகுதிகளில் திமுக வெறும் 116, 142 ஆகிய ஓட்டுக்களில்அதிமுகவிடம் தோற்றுள்ளது. இங்கு விஜய்காந்த் கட்சி 32,329 மற்றும் 10,877 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிங்காநல்லூர் தான் மிக மோசம். இங்கு திமுக சார்பில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் வெறும் 14 வாக்குகள்வித்தியாசத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஐஎன்டியூசி வேட்பாளரிடம் தோற்றுள்ளார். இங்கு 31,268வாக்குகளை விஜய்காந்த் வாங்கிவிட்டார்.

மேலும் இங்கு தபால் ஓட்டுக்களை கணக்கில் சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஐஎன்டியூசிவேட்பாளரின் வெற்றியை எதிர்த்து வழக்குப் போடவுள்ளது சிபிஎம். இதனால் இந்தத் தொகுதியின்வெற்றி-தோல்வி நிலை உல்டா ஆகவும் வாய்ப்புள்ளது.

இதே போல ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் வெறும் 500 வாக்கு வித்தியாசத்தில் தோற்றுள்ளார். இங்குவிஜய்காந்த் 10,251 வாக்குகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் தென் தமிழ்நாட்டிலும், மேற்கு மாவட்டங்களிலும் சுமார் 43 தொகுதிகளில் அதிமுக வாக்குகளைப்பிரித்து திமுகவின் வெற்றிக்கு உதவியுள்ளார் விஜய்காந்த்.

அதே நேரத்தில் 50 தொகுதிகளில் இவர் பிரித்த பாமக-திமுகவின் ஓட்டு அதிமுகவுக்கு உதவியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+