காங்க்கு-சபாநாயகர்: பாமக-து.சபாநாயகர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுகவை வெளியில் இருந்து ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியையும் பாமகவுக்குதுணை சபாநாயகர் பதவியையும் த் தர கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக செய்தி உலாவுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காத திமுக, கூட்டணிக்கட்சிகளின் துணையோடு ஆட்சியில் அமர்ந்துள்ளது. அமைச்சரவிைல் சேரமாட்டோம் என்று பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறி விட்டன.

ஆனால் காங்கிரஸ் தரப்பில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கப்படுகிறது.

சபாநாயகர் பதவிக்கு எதிர்பார்க்கப்பட்ட துரைமுருகன் அதை விரும்பவில்லை. முன்னாள் சபாநாயகர்பழனிவேல் ராஜனும் அமைச்சராக்கப்பட்டுவிட்டார். முன்னாள் துணை சபாநாயகர் பரிதியும்அமைச்சராகிவிட்டார்.

இதனால் சபாநாயகர் யார் என்ற சஸ்பெண்ஸ் பெரும் நிலவுகிறது.

இந் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியையும், பாமகவுக்கு துணைசபாநாயகர் பதவியையும் தர திமுக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கிளம்பியுள்ளன.

ஆனால், இதை திமுக வட்டாரத்தில் திட்டவட்டமாக மறுக்கின்றனர். மெஜாரிட்டிஇல்லாமல் அரசை அமைத்துள்ள நிலையில் அதை கட்டிக் காக்க சபாநாயகர்பதவியை எங்கள் கையிலேயே வைத்திருப்பது மிக அவசியம்.

இதனால் அதைத் தர மாட்டோம். காங்கிரசுக்கு துணை சபாநாயகர் பதவிவேண்டுமானால் தரப்படலாம் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+