மீண்டும் புதுவை முதல்வராகிறார் ரங்கசாமி

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி யூனியன் பிரசேத முதல்வராக மீண்டும் ரங்கசாமி பதவியேற்கிறார்.

புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி20 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சிஆட்சி அமைக்க திமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் நிபந்தனையறறஆதரவு அளித்துள்ளன.

இதைத் தொடர்ந்து சட்டசபை காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுக்க புதுவையில்காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடந்தது.

இதில் மேலிடப் பார்வையாளர்களாக மோதிலால் வோரா, ஹரிபிரசாத் ஆகியோர்கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தல்வர் ரங்கசாமியையே மீண்டும் சட்டசபைத்தலைவராக எம்.எல்.ஏக்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.

முன்னதாக முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கமும் கடுமையாகமுயற்சித்தார். இருப்பினும் எம்.எல்.ஏக்கள் மத்தியில் ரங்கசாமிக்கே ஏகோபித்தஆதரவு இருந்த காரணத்தால் அவர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

ரங்கசாமியின் தேர்வு சோனியா காந்தியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து ரங்கசாமியின் தேர்வு அதிகாரப்பூர்வமாகவோராவால் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரங்கசாமி மீண்டும் முதல்வர் ஆகிறார்.

இக்கூட்டத்தைத் தொடர்ந்து ரங்கசாமி, துணை நிலை ஆளுனர் லகேராவை சந்தித்துமுறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இந்த கோரிக்கையை மத்திய உள்துறையின் ஒப்புதலுக்கு ஆளுனர் அனுப்பிவைத்துள்ளார். உள்துறை ஒப்புதல் கிடைத்தவுடன் ரங்கசாமி அமைச்சரவைபதவியேற்கும்.

18ம் தேதி ரங்கசாமி முதல்வராக பதவியேற்கக் கூடும் எனத் தெரிகிறது.

அதிமுகவுக்கு கண்ணன் பை..பை..:

இதற்கிடையே, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 3 இடங்களில் வென்றுள்ளகண்ணனின் புதுவை காங்கிரஸ் கட்சி அந்தக் கூட்டணியில் இருந்து விலகும் என்றுதெரிகிறது.

தனது கட்சியை மீண்டும் காங்கிரசிலேயே இணைத்துவிட கண்ணன் முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் புதுவை மாநில சட்டசபை அதிமுக தலைவராக அன்பழகன் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.

துணைத் தலைவராக ஓம் சக்தி சேகர், கொறடாவாக ஓமலிங்கம் ஆகியோரும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+