அகதியாக வந்த இலங்கை தொழிலதிபர்!

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

தொழிலதிபர் உள்ளிட்ட 17 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம்வந்துள்ளனர்.

இலங்கையில் விடுதலைப் புலிகளைத் தாக்குவதாகக் கூறி அப்பாவித் தமிழர்கள் மீதுதாக்குதல் நடத்தி வருகிறது இலங்கை ராணுவம். இதுதவிர தேடுதல் வேட்டை என்றபெயரில் அடிக்கடி முப்படையினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில்அப்பாவித் தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து தமிழர்கள் அதிக அளவில் அகதிகளாகதமிழகம் வந்தவண்ணம் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை திரிகோணமலை திருக்கடவூர்பகுதியைச் சேர்ந்த 7 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் அகதிகளாக ராமேஸ்வரம்வந்தனர்.

தனுஷ்கோடிக்கு வந்து இறங்கிய அவர்கள் இந்திய கடற்படையினரிடம்சரணடைந்தனர். அவர்கள் பின்னர் மண்டபம் காவல் நிலையத்திற்குஅனுப்பப்பட்டனர்.

அங்கு போலீஸார் 17 பேரிடமும் தனித் தனியாக விசாரணை நடத்தினர்.விசாரணைக்குப் பின்னர் அனைவரும் மண்டபம் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதில் சோகமான விஷயம் என்னவென்றால் கயிலைநாதன் என்பவர் அப்பகுதியில்தொழிலதிபர். அவருக்குச் சொந்தமாக 3 பெரிய மளிகைக் கடைகள் உள்ளனவாம்.அப்பகுதி பஞ்சாயத்துத் தலைவராகவும் இருக்கிறார்.

ராணுவத்தினரின் சித்திரவதைக்குப் பயந்தும், உயிருக்குப் பயந்தும் பல லட்சம்மதிப்புள்ள சொத்துக்களை விட்டு விட்டு அகதியாக தமிழகம் வந்துள்ளார்.

கடந்த 10 நாட்களில் மட்டும் மண்டபம் முகாமுக்கு இதுவரை 750க்கும் மேற்பட்டஅகதிகள் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+