நாடாளுமன்றத்தை கலக்கிய 2 ரூபாய் அரிசி!
டெல்லி:
திமுகவின் தேர்தல் வாக்குறுதியான 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி குறித்துநாடாளுமன்ற மாநிலங்களவையில் சூடான விவாதம் நடந்தது.
பாஜக மற்றும் அதிமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர்ப.சிதம்பரம் விரிவான பதில் தரவில்லை என்று கூறி அக்கட்சிகளைச் சேர்ந்தஉறுப்பினர்கள் கோஷம் எழுப்பியதால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பாஜக உறுப்பினர் யஷ்வந்த்சின்ஹா எழுந்து,
தமிழகத்தில் 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கப்படும் என திமுகவின் தேர்தல்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவியுடன் இத்திட்டத்தைநிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்டபோது,இத்திட்டம் சாத்தியமானதே என்று தெரிவித்துள்ளார்.
அப்படியென்றால் இத்திட்டத்தை இந்தியா முழுவதும் மத்திய அரசு அமல்படுத்துமா?அனைத்து மாநில அரசுகளுக்கும் இதேபோல நிதியுதவி அளிக்கப்படுமா என்பதைசிதம்பரம் விளக்க வேண்டும் என்றார்.
இதற்கு ப.சிதம்பரம் பதிலளிக்கையில், மாநில அரசின் நிதி இருப்பைக் கணக்கில்வைத்து இத்திட்டத்தை நிறைவேற்றலாம் என்று மட்டுமே நான் கூறினேன். மத்தியஅரசு உதவி செய்யும் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. மாநில அரசே தனதுநிதி நிலையை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டத்தை நிறைவேற்றும்,நிறைவேற்ற வேண்டும். இதில் மத்திய அரசின் உதவி என்ற கேள்வியே எழவில்லைஎன்றார்.
அப்போது குறுக்கிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பிருந்தா காரத்,
நாடு முழுவதும் 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டம் சாத்தியமானதா,இல்லையா என்பதை சிதம்பரம் தெளிவாக விளக்க வேண்டும் என்றார்.
அதற்கு ப.சிதம்பரம் பதிலளிக்கையில், இதுதொடர்பாக இப்போது விரிவாகவிவாதிக்க இயலாது. சம்பந்தப்பட்ட மாநில அரசிடமே இதுகுறித்து உறுப்பினர்விளக்கம் கேட்டுக் கொள்ளலாம் என்று கூறி விட்டு அமர்ந்தார்.
அப்போது அதிமுக உறுப்பினர் மலைச்சாமி எழுந்து கேள்வி கேட்க முயன்றார்.ஆனால் அதற்கு சபைத் தலைவர் அனுமதி தரவில்லை.
இதை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதேபோல பாஜகஉறுப்பினர்களும் சிதம்பரத்தின் பதில் திருப்தியாக இல்லை என்று கூறிகோஷமிட்டனர்.
இதனால் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.












Click it and Unblock the Notifications