கருணாநிதியின் நண்பருக்கு எதிராக வழக்கு
சென்னை:
திமுக தேர்தல் அறிக்கையைத் தயாரித்த, திருவல்லிக்கேணி திமுக வேட்பாளரும்முதல்வர் கருணாநிதியின் நண்பருமான நாகநாதனின் விருப்ப ஓய்வை சென்னைபல்கலைக்கழகம் ஏற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையைத் தயார் செய்து கொடுத்தவர் நாகநாதன். இவர் சென்னைபல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். தேர்தலில் நிற்பதற்காகதனது பதவியிலிருந்து விலகினார்.பின்னர் திருவல்லிக்கேணி தொகுதியில் நின்று தோல்வியைத் தழுவினார்.
தனது பதவியை ராஜினாமா செய்யாமல் விருப்ப ஓய்வு பெறுவதாக பல்கலைக்கழகதுணைவேந்தருக்கு நாகநாதன் தெரிவித்திருந்தார். இதை ஏற்ற பல்கலைக்கழகம்அவருக்கு விருப்ப ஓய்வு அளித்தது.
இந் நிலையில் இதை எதிர்த்து சுதர்சன் என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்குபோட்டுள்ளார்.
அதில், நாகநாதன் தனது சொந்தக் காரணத்துக்காக கடந்த 21.3.2006 அன்று விருப்பஓய்வு பெறுவதாக கூறி பல்கலைக்கழகத்திடம் மனு கொடுத்தார். 31ம் தேதியே இவர்திமுக வேட்பாளராக நியமிக்கப்படுகிறார் என்று செய்திகள் வெளியாகின.
எனவே தனது பதவியில் இருந்தபோது தேர்தலில் நிற்க டிக்கெட் கேட்டுள்ளார்.இவரது விருப்ப ஓய்வு மனுவை ஏப்ரல் 4ம் தேதி ஏற்று பல்கலைக்கழக துணைவேந்தர்உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைய விதிமுறைப்படி அரசுப் பணியாளராக இருப்பவர் தனது பணியைராஜினாமா செய்த பின்னர்தான் போட்டியிட முடியும். விருப்ப ஓய்வு பெற்ற அரசுஊழியர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.
மேலும் 3 மாத கால அவகாச நோட்டீஸ் கொடுத்துத்தான் விருப்ப ஓய்வு பெறமுடியும். 3 மாதத்திற்கு முன்பாக விருப்ப ஓய்வு பெற வேண்டும் என்றால் அதற்குவிதி விலக்கு அளிக்க பல்கலைக்கழக சிண்டிகேட்டுக்குத்தான் அதிகாரம் உண்டு.
ரெகுலர் சிண்டிகேட்டை கூட்டி 3 மாதத்திற்கு விலக்கு அளிக்க ஒப்புதல் பெறாமல்,அவருக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. எனவே நாகநாதனின் விருப்பஓய்வை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் சுதர்சன்.
இந்த மனுவை நீதிபதிகள் பால்வசந்தகுமார், தமிழ்வாணன் ஆகியோர் பரிசீலித்துசென்னை பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications