உயர் கல்வியில் இட ஒதுக்கீடு-4 அமைச்சர்கள் குழு நியமனம்
டெல்லி:
உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக எழுந்துள்ளசிக்கல்களுக்குத் தீர்வு காண 4 அமைச்சர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
அதில், பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங், சட்டஅமைச்சர் பரத்வாஜ் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் இக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.இந்தக் குழு இட ஒதுக்கீடு பிரச்சினையின் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான திட்டத்தைவகுப்பர்.
அதே நேரத்தில் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடுவழங்கும் முடிவிலிருந்து மத்திய அரசு பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று மனிதவள மேம்பாட்டுத்துரைஅமைச்சர் அர்ஜூன் சிங் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இட ஒதுக்கீட்டை எதிர்த்து வட மாநிலங்களில் மருத்துவக் கல்லூரி மாணவர்ளும் டாக்டர்களும் போராட்டம்நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்,அமைச்சர்கள் அர்ஜூன் சிங், சரத் பவார், லாலு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரை டெல்லியில்சந்தித்து உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு முதலே கட்டாயம் அமலாக்க வேண்டும்என்று கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக போலியான போராட்டங்களை நடத்தி அதை டிவி, பத்திரிக்கைகளில் பெரிய போராட்டம்போல ஊதிப் பெரிதாக்கும் முயற்சி நடப்பதாகக் கூறிய ராமதாஸ், இந்த முயற்சிகளுக்கு மத்திய அரசுபலியாகிவிடக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications