பிஇ, எம்பிபிஎஸ்: நுழைவு தேர்வு தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுஇன்று தொடங்கியது.
மருத்துவம், பொறியியல், தோட்டகலைத்துறை, வேளாண்மை உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புக்கான அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வு இன்றுகாலை 10 மணிக்குத் தொடங்கியது.மொத்தம் 41 நகரங்களில் 304 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 1.51 லட்சம்மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதினர்.
இன்று காலை உயிரியல் தேர்வும், பிற்பகலில் இயற்பியல் தேர்வும் நடந்தன. நாளைகாலை கணிதத் தேர்வு நடக்கிறது.
தேர்வையொட்டி பல்வேறு பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு மாணவர்கள்கண்காணிக்கப்படுகின்றனர்.
ஜூன் 4ம் தேதி இந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகும்.












Click it and Unblock the Notifications