For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாதி பூசல்-ஐஐடி மாணவர்களின் கட்சி உடைந்தது!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சட்டசபைத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று எல்லோரையும்ஆச்சரியப்படுத்திய முன்னாள் ஐஐடி மாணவர்களின் லோக் பரித்ரன் கட்சி உடைந்துவிட்டது.

கட்சிக்குள் நிலவிய ஜாதிச் சண்டையே இதற்கு முக்கியக் காரணம் என்று தெரிகிறது.கட்சியில் உள்ள முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிற்பட்ட,தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாக நடத்தியதாகத் தெரிகிறது. இதனால் பிளவுஏற்பட்டுள்ளது.

கட்சிக்குள் முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பிற்பட்ட,தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் இந்தப் பிளவுஏற்பட்டுள்ளது.

இவர்களது கட்சிக்கு சென்னை மற்றும் பிற நகரங்களில் உள்ள படித்தவர்கள் மத்தியில்நல்ல வரவேற்பு கிடைத்தது.

சட்டசபைத் தேர்தலில் இக்கட்சி சென்னையில் சில தொகுதிகள் உள்பட தமிழகம்முழுவதும் பரவலாக போட்டியிட்டது. இதில் கிட்டத்தட்ட ஏழரை லட்சம் வாக்குகளைபெற்று அத்தனை பேரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந் நிலையில் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இக்கட்சியின் சார்பில் அண்ணாநகரில் போட்டியிட்ட ராஜாமணி தலைமையில் கட்சியின் 3 வேட்பாளர்கள்கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

வெளியேறியவர்களில் ஆயிரம் விளக்கு வேட்பாளர் இஸ்ரயேல் மகேஷ்வர்,சேப்பாக்கம் தொகுதி வேட்பாளர் இளம் திருமுருகன் ஆகியோரும் அடங்குவர்.

3 பேரும் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில், கட்சியில் வெளிப்படையானகொள்கை, செயல்பாடுகள் இல்லை. உயர் மட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் ஜாதீயகண்ணோட்டத்துடன்தான் செயல்படுகின்றனர். இதை நாங்கள் சற்றும்எதிர்பார்க்கவில்லை.

எங்களது ஜாதியைக் குறிப்பிட்டுப் பேசும் கட்சியின் தேசியத் தலைவர் தன்மய்ராஜ்புராஹித் உள்ளிட்ட சிலர், பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த எங்களைதனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதை நாங்கள் விரும்பவில்லை.

மேலும் வேட்பாளர்களின் வீடுகளுக்குப் போன் செய்து நீங்கள் என்ன ஜாதி என்றுவிசாரித்தார்கள். அப்போதே மனம் நொந்துவிட்டது.

இந்தக் கட்சியை எப்படி மதச்சார்பற்ற, முற்போக்கான கட்சி என்று கூற முடியும்?இதை விட கொடுமையான விஷயம், மைலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டகட்சியின் ஆலோசகர் சந்தானகோபாலன் வாசுதேவுக்காக பல்வேறு வழிகளிலும் நிதிதிரட்டினார்கள்.

இந்த நிதியை எல்லாம் மொத்தமாக மைலாப்பூரில் மட்டுமே செலவழித்தார்கள்.இந்தக் கட்சியை மைலாப்பூர் கட்சி என்று அழைத்தால் பொருத்தமாக இருக்கும்.

தேசியக் கட்சியாக இதை கருத முடியாது. இக்கட்சி குறித்து கேள்விப்பட்டபோது,நாங்கள் மிகவும் சந்தோஷமடைந்து பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வந்து சேர்ந்தோம்.

ஆனால் மற்ற கட்சிகளைப் போலவே இங்கும் பாகுபாடு பார்க்கப்படுவது, ஜாதியஅடிப்படையில் அணுகுவது என்று இருந்ததால் மனம் வெதும்பி விலகி விட்டோம்.

விரைவில் புதிய கட்சியைத் தொடங்குவோம். அதுகுறித்த அறிவிப்பு விரைவில்வெளியாகும் என்று அவர்கள் கூறினர். இதில் ராஜாமணி வெளிநாட்டில் சாப்ட்வேர்பொறியாளராக பல ஆண்டுகள் வேலை பார்த்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் தலைவர் ராஜ்புரோஹித் மீதான குற்றச்சாட்டுக்களை இணைய தளம்மூலமும் இவர்கள் வெளியிட்டுள்ளனர். அதன் முகவரி : purohitexposed.blogspot.com

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X