தி டாவின்சி கோட்: தமிழகத்திலும் எதிர்ப்பு
சென்னை:
இயேசு கிறிஸ்துவை அவமதிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள தி டாவின்சி கோட்படத்தை இந்தியாவில் திரையிட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு,புதுவை சிறுபான்மையினர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அமைப்பின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பில்,தி டாவின்சி கோட் படம் இயேசு கிறிஸ்துவை அவமதிக்கும் கருத்துக்களைஉள்ளடக்கியதாக எடுக்கப்பட்டுள்ளது. இயேசுவின் வாழ்க்கையை ஆட்சேபகரமானமுறையில் படமாக்கியுள்ளார்கள்.
இந்தப் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்து தணிக்கை வாரியம் திரையிட அனுமதிஅளித்துள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது.
இயேசு நாதர் தவிர நபிகள் நாயகம் குறித்தும் பொய்யான தகவல்கள் இந்தப் படத்தில்உள்ளன.
கனடாவில் உள்ள இஸ்லாமிய சுப்ரீம் கவுன்சில் மற்றும் இந்தியாவில் உள்ள முஸ்லீம்அறிஞர்கள் இப்படத்திற்கு எதிர்ப்த்பு தெரிவித்துள்ள நிலையில் தணிக்கை வாரியம்அனுமதி அளித்திருப்பது கண்டனத்துக்குரியது.
எனவே மத்திய அரசு படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்ஹைதர் அலி.
இந்தப் படத்துக்கு எதிராக நாடு முழுவதும் கிருஸ்துவ அமைப்புகள் போராட்டம்நடத்தி வருகின்றன. இதையடுத்து படத்தை தணிக்கைத்துறையினருடன் சேர்ந்துமத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷியும் பார்த்தார்.
இதையடுத்து ஏ சர்டிபிகேட் கொடுத்து படத்தைத் திரையிட தணிக்கை வாரியம்அனுமதி அளித்தது.












Click it and Unblock the Notifications