செவ்வா, வெள்ளி முட்டை கூடாது-இந்து அமைப்பு
சென்னை:
செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் இந்துக்களுக்கு புனிதமான நாட்கள், அந்த நாட்களில்அசைவம் சாப்பிடக் கூடாது, எனவே இந்த இரு நாட்களும் பள்ளிகளில்சத்துணவின்போது முட்டைகள் வழங்குவதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என்றுஇந்து அமைப்புகளின் சம்மேளனம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநதி இந்த அமைப்பு அனுப்பியுள்ள கோரிக்கைகடிதத்தில்,பள்ளிகளில் சத்துணவுடன் வாரம் இருமுறை முட்டை வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்துள்ளது. அதன்படி வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்முட்டை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்துக்களைப் பொருத்தவரை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் புனிதமானநாட்கள். அந்த நிாட்களில் அசைவம் சாப்பிட மாட்டார்கள்.
சனிக்கிழமைகளிலும் அசைவத்தைத் தவிர்ப்பது வழக்கம். எனவே இந்த நாட்களில்முட்டை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
அதற்குப் பதில் திங்கள், புதன், வியாழன் ஆகிய நாட்களில் ஏதாவது இரு நாட்கள்முட்டை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications