காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழை
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது.இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக கடும் வெயில் குறைந்துள்ளது. இந் நிலையில் நேற்று மாலை முதல்காவிரி டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.திருச்சி, திருவாரூர், தஞ்சையில் நேற்றிரவு கன மழை பெய்தது. இதனால் சாலைகளில்தண்ணீர் ஆறு போல ஓடியது. இன்று காலையும் நாகை, திருவாரூர் உள்ளிட்டமாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
மேலும், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்தவண்ணம் உள்ளது.இதனால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏற்பட்டுள்ளது.
அணையில் நீர் போதிய அளவு இருப்பதாலும், தொடர் மழை காரணமாகவும் வருகிறஜூன் மாதம் 12ம் தேதி திட்டமிட்டபடி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர்திறந்து விடப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications