குறுவை: விவசாயிகளுக்கு ரூ.1000 கோடி கடன்
கும்பகோணம்:
தமிழகத்தில் வரும் குறுவை சாகுபடிக்கு விவசாயிகளுக்கு ரூ. 1000 கோடி அளவுக்குகடன் உதவி வழங்கப்படவுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி.மணிகூறியுள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜூன் 3ம் தேதி 2ரூபாய்க்கு 1 கிலோ அரிசி தரும் திட்டத்தைமுதல்வர் கருணாநதி தொடங்கிவைக்கிறார்.மாவட்டங்களில் அமைச்சர்கள், ஆட்சித் தலைவர்கள் தொடங்கிவைப்பார்கள்.விவசாயிகளுக்கான கூட்டுறவுக் கடன் முழுமையாக தள்ளுபடிசெய்யப்படும். இதுதொடர்பான பயனாளிகள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டுவருகிறது.
குறுவை சாகுபடிக்காக வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் முதற்கட்டமாக ரூ.1000 கோடி கடன் வழங்கப்படும். மற்ற வழக்கமான கடன்களும் விவசாயிகளுக்குக்கிடைக்கும்.
கூட்டுறவு வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்தது போல மற்ற வங்கிகளில் உள்ளகடன்களையும் தள்ளுபடி செய்ய விவசாயிகள் கோரி வருகின்றனர். அதில் சில சட்டசிக்கல்கள் உள்ளன. அதுகுறித்து முதல்வர் கருணாநதி பரிசீலித்து வருகிறார்.
ஜூன் 12ம் தேதி திட்டமிட்டபடி மேட்டூர் அணையை பாசனத்திற்காக திறக்க முடியும்.அணையில் போதிய நீர் உள்ளது, மழையும் பெய்து வருகிறது என்றார் மணி.












Click it and Unblock the Notifications