தமிழால் முதலிடம் பெற்ற-இழந்த மாணவன்-மாணவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மாநில அளவில் 1182 மதிப்பெண்களை பெற்றும், தமிழை முதன்மைப் பாடமாகஎடுத்துப் படிக்காத காரணத்தால் சென்னை மாணவிக்கு மாநில அளவில் ரேங்க் கைநழுவிப் போனது.

பிளஸ்டூ தேர்வில் சென்னை நங்கநல்லூர் பிரின்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்பரத்ராம் 1180 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதே பள்ளியில் படித்த மாணவி சந்தோஷினி 1182 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.இருப்பினும் இவர் தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்கவில்லை. இதனால்தமிழை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்த பரத்ராம் முதலிடத்தைப் பிடித்தார்.

சமஸ்கிருத்தை முதன்மை பாடமாக எடுத்து படித்த சந்தோஷினி முதல் ரேங்கை இழந்தார்.

தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைவு:

இதற்கிடையே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்ச்சி விகிதம் 2.3 சதவீதம் குறைந்துள்ளது.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில் மாணவ, மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 74.5 சதவீதமாக உள்ளது. இதுகடந்த ஆண்டை விட 2.3 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 76.8 சதவீதமாக இருந்தது.

இதற்கிடையே, 3 அல்லது அதற்கு குறைந்த பாடங்களில் தோல்வியுற்றவர்கள் ஜூன் மாதம் நடத்தப்படும் சிறப்புத் துணைத் தேர்வில் கலந்து கொண்டுஎழுதலாம் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் ஜெந்நாதன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், 3 அல்லது அதற்குக் குறைந்த பாடங்களில் தோல்வியுற்றவர்கள் ஜூன் மாதம் நடைபெறும் சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்கலாம்.இதற்கான விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும் உள்ள 7 மண்டல அலுவலகங்களில் வருகிற 29ம் தேதி தல் ஜூன் 1ம் தேதி வரை வழங்கப்படும். இந்தவிண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளிலேயே மாணவ, மாணவியர் வழங்கலாம்.

தேர்வு ஜூன் 26ம் தேதி முதல் ஜூலை 8ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றார்.

நாட்டுக்கு சேவை செய்வேன்: பரத்ராம்

இதற்கிடையே மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுத் தேறியுள்ள சென்னை நங்கநல்லூர் மாணவர் பரத்ராம் பொறியியல் படிப்பை முடித்து இந்தியாவிலேயேதங்கியிருந்து நாட்டுக்கு சேவை செய்யப் போவதாக கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், நான் பொறியியல் படிப்பு படிப்பேன். படிப்பை முடித்து விட்டு வெளிநாடுகளுக்குப் போக மாட்டேன். இந்தியாவுக்கு சேவை செய்வதே எனதுலட்சியம் என்றார். இவர் 1200க்கு 1180 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

தமிழ் அல்லாத பிற மொழியை முதன்மை பாடமாக எடுத்த மாணவர்களில் முதலிடம் பெற்றுள்ள சென்னை மாணவி காவ்யா கூறுகையில்,

நான் சிஏ படிக்கத் திட்டமிட்டுள்ளேன். அதை முடித்து விட்டு ஐ.ஐ.எம்மில் சேர்ந்து எம்.பி.ஏ. படிக்க திட்டமிட்டுள்ளேன் என்றார். இவர் மொத்தம் நான்குபாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பிரிவில் 2வது இடத்தைப் பிடித்துள்ள கோவை மாணவி நாகலட்சுமி கூறுகையில், பொறியியல் படிப்பை முடித்து நாட்டுக்கு சேவை செய்யத் திட்டமிட்டுள்ளேன்என்றார். இவர் மொத்தம் 1185 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+