செக்ஸ் தொல்லை: 50 வயது கணவர் மீது மனைவி போலீஸில் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

50 வயதான தனது கணவர் தினசரி செக்ஸ் உறவுக்கு அழைத்துகொடுமைப்படுத்துவதாக கூறி அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார்.

இதையடுத்து கணவன், மனைவியை அழைத்து போலீஸார் பல்வேறுஅறிவுரைகளைக் கூறி அனுப்பி வைத்தனர்.

சென்னை பூக்கடை காவல் நிலையத்திற்கு ஒரு பெண் வந்தார். அங்கிருந்தஇன்ஸ்பெக்டர் ராணியிடம் ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்.

மனுவை வாங்கிப் படித்த ராணி அதிர்ச்சி அடைந்தார். காரணம் அப்பெண் கூறியிருந்தபுகார் விவகாரமானதாக இருந்தது.

புகாரில் அப்பெண் கூறியிருந்ததாவது: எனக்கு வயது 42. எனது கணவருக்கு 50வயதாகிறது. எனக்கு கல்யாணம் ஆனதிலிருந்தே எனது கணவர் என்னை செக்ஸ்கைதியாக தொல்லைப்படுத்தி வந்தார்.

தினசரி அவருக்கு செக்ஸ் வேண்டும். எங்களுக்கு வயதுக்கு வந்த மகள் இருக்கிறார்.மகளுடையே வயதை கருத்தில் கொண்டு நான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கநினைப்பேன்.

ஆனால் அதை எனது கணவர் புரிந்து கொள்ள மாட்டார்.

அவருக்கு தினசரி உறவு வைத்துக் கொள்ள வேண்டும். மகள் இருக்கிறாளே என்றுகூட பார்க்க மாட்டார்.

எனக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. செக்ஸ் உறவையே நான் வெறுக்கஆரம்பித்தேன். ஆனால் அவர் கூப்பிட்டு நான் வராவிட்டால் என்னை அடித்துஉதைப்பார், நீ எனக்குத் தேவையில்லை என்று கூறி சித்திரவதை செய்வார்.

இத்தனை காலமாக அவரது தொல்லையை கஷ்டப்பட்டு சகித்து வந்த நான் இப்போதுஅவர் எல்லை மீறி போக ஆரம்பித்ததால் அவரிடமிருந்து பிரிந்து எனது பெற்றோர்வீட்டிற்கு வந்து வசித்து வருகிறேன்.

எனது மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எனது கணவரை காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரித்து, அவரிடமிருந்து எனக்கு விவாகரத்து வாங்கித் தரஉதவ வேண்டும் என்று கூறியிருந்தார் அப்பெண்மணி.

அந்தப் பெண்ணின் நிலையை உணர்ந்த இன்ஸ்பெக்டர் ராணி, அவரைசமாதானப்படுத்தினார். பின்னர் அப்பெண்ணின் கணவரை காவல் நிலையத்திற்குவரவழைத்தார்.

இருவரையும் உட்கார வைத்து பேசினார். அவருக்கு பல்வேறு காவல் துறைஅதிகாரிகள் கவுன்சிலிங் நடத்தினர். செக்ஸ் என்பது வாழ்க்கையில் தவிர்க்கமுடியாதஒன்றுதான்.

ஆனால் அது வெறியாக மாறி குடும்ப வாழ்க்கையை குலைக்கும் அளவுக்குப் போய்விடக் கூடாது.

இனிமேலாவது மனைவியிடம் அன்பாக, கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்.வயதுக்கு வந்த மகள் வீட்டில் இருக்கம்போது கட்டுப்பாடு காப்பது அவசியம் என்றுஅப்பெண்ணின் கணவருக்கு போலீஸார் அறிவுரை கூறினர்.

அதேபோல, உங்களது உணர்வுகளை கணவரிடம் தெளிவாகப் பேசி புரியவையுங்கள். செக்ஸை பெரிய தவறாக நினைக்காதீர்கள், இணக்கமாக பேசி அவருக்குபுரிய வைத்தால் பிரச்சினை இருக்காது என்று அப்பெண்ணுக்கும் அறிவுரை கூறினர்.

3 நாள் சேர்ந்து வாழுங்கள். அதன் பிறகும் பிரச்சினை இருக்கிறது என்றால் திரும்பவாருங்கள் என்று அப்பெண்ணுக்கு போலீஸார் அறிவுறுத்தினர்.

இதையடுத்து 3 நாள் வாழ்ந்து பார்ப்பதாகவும்,சரிப்படாது என்று தெரிந்தால் மீண்டும்காவல் நிலையம் வருவதாக கூறி அப்பெண்ணும் அவரது கணவரும் விடைபெற்றுச்சென்றனர்.

தம்பதியினரின் நலனை கருத்தில் கொண்டு பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+