பிளஸ் டூ: சென்னை மாணவர் பரத்ராம் முதலிடம்: மாணவிகள் 77.7%, மாணவர்கள்71.7% தேர்ச்சி: முதலிடம் பெற்றவர்களுக்கு அரசு உதவி-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.

Bharathram with sisiterசென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த மாணவர் பரத்ராம் மாநிலத்திலேயே முதல்மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.

தேர்வு எழுதியவர்களில்74.5 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 71.7 சதவீதம், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 77.1சதவீதமாகும்.

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த மாணவர் பரத்ராம் 1,180 மதிப்பெண்கள் பெற்றுமாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்வு பெற்றுள்ளார்.

இரண்டாவது இடமும் சென்னைக்கே:

சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி பள்ளி மாணவர்கள் சாந்த பிரகாஷ், விவேக் சந்தீப்ஆகியோர் 1200க்கு 1179 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தைப் பெற்றுள்ளனர்.

3வது இடத்தில் கிருஷ்ணகிரி மாணவி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவி பானுப்பிரியா 1177மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே 3வது மாணவியாக வந்துள்ளார்.

கணிதத்தில் 855 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.இயற்பியலில் 17 பேரும், வேதியியலில் 119 பேரும், உயிரியலில் 89 பேரும்,தாவரவியலில் 55 பேரும், கம்ப்யூட்டர் அறிவியலில் 37 பேரும் 200க்கு 200மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். விலங்கியல் பாடத்தில் யாரும் 200க்கு 200மதிப்பெண்கள் எடுக்கவில்லை.

தமிழில் மதுரை மாணவி முதல் ரேங்க்:

தமிழை முதன்மை மொழிப் பாடமாக எடுத்துப் படித்த மாணவர்களில் மதுரை திருமங்கலம் பி.கே.என். மேல்நிலைப்பள்ளி மாணவர் விஜயானந்த் முதலிடம்பிடித்துள்ளார். அவர் தமிழில் 196 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

திருச்சி மாணவி:

திருச்சி ஹோலிகிராஸ் பள்ளி மாணவி அருணா ராணி, அம்பத்தூர் சேது பாஸ்கரா பள்ளி மாணவி உமா மகேஸ்வரியும் தலா 195 மதிப்பெண்கள் பெற்றுமுறையே 2வது மற்றும் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

அஹோபில பள்ளி முதலிடம்:

தமிழ் அல்லாத பிற மொழியை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தவர்களில் சென்னை அஹோபில மட பள்ளி மாணவி காவ்யா 1186 மதிப்பெண்களுடன்முதலிடத்தையும், மாணவி நாகலட்சுமி 1185 மதிப்பெண்களுடன் 2வது இடத்தையும்,

மதுரை டிவிஎஸ் மேல் நிலைப்பள்ளி மாணவி ஜனனி, நாமக்கல் மாணவர் ஸ்ரீராம் 1184 மதிப்பெண்களுடன் 3வது இடத்தையும் பிடித்தனர்.

வணிகவியலில் 529 பேரும், வர்த்தக கணிதத்தில் 123 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பிளஸ் டூ டாப்பர்களுக்கு அரசு உதவி: கருணாநிதி

தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்து பிளஸ்டூ தேர்வில் மாநில மற்றும் மாவட்டஅளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள மாணவ, மாணவியரின் உயர்கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் கருணாநிதிஅறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பத்தாவது மற்றும் பிளஸ்டூதேர்வில், தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்து, மாநில மற்றும் மாவட்ட அளவில்முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியரின் உயர் கல்விச் செலவுகள்முழுவதையும் அரசே ஏற்கும் திட்டத்தை முதன் முதலில் திமுக ஆட்சிதான் கொண்டுவந்தது. அந்தத் திட்டம் தற்போதும் தொடருகிறது.

எனவே இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்து முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ,மாணவியர் எந்தக் கல்லூரியில், என்ன பாடம் படிக்க விரும்பினாலும் அதற்குரிய முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்கும்என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+