ஆற்றை சுரண்டும் 300 மணல் லாரிகள் சிறைபிடிப்பு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளிய 300க்கும்மேற்பட்ட லாரிகளை திமுக மற்றும் பாமகவினர் மடக்கிப் பிடித்து சிறை வைத்ததால்ஆற்காடு அருகே பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள பூங்கோடு கிராமத்தில் பாலாறு ஓடுகிறது.சில மாதங்களைத் தவிர பெரும்பாலும் வறண்டு போய் கிடக்கும் இந்த பாலாற்றில்மணல் அள்ள ஆறுமுகச்சாமி என்பவருக்கு கடந்த அதிமுக ஆட்சியில் அனுமதிதரப்பட்டிருந்தது.ஆறுமுகச்சாமி, விதிமுறைகளுக்குப் புறம்பாக அதிக அளவில் மணல் அள்ளிவருவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் புகார் கூறி வந்தன.
விதிமுறைப்படி 5 ஏக்கர் பரப்பளவில், 3 அடி ஆழம் வரை மட்டுமே மணல் அள்ளவேண்டும். ஆனால் காண்டிராக்டர் ஆறுமுகச்சாமியோ 60 ஏக்கர் பரப்பளவுக்கு 10அடி வரை மணலை சுரண்டி வந்தார்.
போயஸ் கார்டனை கவனிக்க வேண்டிய விதத்தில் இவர் கவனித்ததால் மணலைஎம்புட்டு வேணும்மாலும் அள்ளிக்கோ என்ற அனுமதி தரப்பட்டிருந்தது.
முதலில் மணலை இவரே அள்ளி லாரிகளில் ஏற்று விற்றும் வந்தார். பின்னர் மணல்விற்பனையை அரசே ஏற்று நடத்த ஆரம்பித்தது. ஆனாலும் ஆறுமுகச்சாமி உதவும்வகையில், ஆற்றில் இருந்து லாரிகளுக்கு மணலை அள்ளித் தரும் காண்ட்ராக்ட்மொத்தமாகத் தரப்பட்டது.
இப்படி மணலை அள்ளுவதால் பாலாற்றின் வளம் குறைந்து, வேலூர் மாவட்டத்தில்பெரும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் என மக்களும் அச்சம் தெரிவித்து வந்தனர்.
ஆனால், ஆட்சி மாறியதும் திமுக அமைச்சர்களையும் ஒரு நடை போய் பார்த்துவிட்டுவந்தார் ஆறுமுகச்சாமி.
இந் நிலையில் பூங்கோடு கிராமத்தில் இன்று மணல் அள்ள வந்த 300க்கும் மேற்பட்டலாரிகளை பாமக மற்றும் திமுகவினர் மடக்கிப் பிடித்தனர்.
ஆற்காடு பாமக எம்.எல்.ஏ. இளவழகன் தலைமையில் பாமகவினரும், ஒன்றிய திமுகசெயலாளர் பாண்டுரங்கன் தலைமையில் திமுகவினரும் இன்று காலை 9 மணி முதல்பூங்கோடு கிராமத்தை முற்றுகையிட்டு லாரிகளை மடக்கிப் பிடித்து சிறை வைத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் ஆற்காடு தாசில்தார் ஜெயக்குமார், பொதுப்பணித்துறைபொறியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் விரைந்து சென்று பாமக,திமுகவினருடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். கிட்டத்தட்ட நான்கு மணிநேரத்திற்குப் பிறகு முற்றுகைப் போராட்டத்தை இரு கட்சியினரும் கைவிட்டனர்.
அதன் பிறகே லாரிகள் திரும்பிச் செல்ல முடிந்தது.












Click it and Unblock the Notifications