ஜெயா-வைகோவுக்கு பாதுகாப்பு: பிரதமரிடம்அதிமுக, மதிமுக கூட்டாக மனு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோஆகியோருக்கு உயர் மட்டப் பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரி பிரதமர்மன்மோகன் சிங்கிடம் அதிமுக மற்றும் மதிமுக எம்.பிக்கள் நேரில் மனுகொடுத்துள்ளனர்.

திமுக ஆட்சி பதவியேற்றதும் ஜெயலலிதாவுக்குத் தரப்பட்டு வந்த இசட் பிரிவுபாதுகாப்பு வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. மிகவும் சொற்ப எண்ணிக்கையிலானகாவலர்கள் மட்டுமே அவரது பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனக்கு தொடர்ந்து தொலைபேசி மூலம்கொலை மிரட்டல் வருவதாக புகார் கூறியுள்ளார்.

இந் நிலையில் அதிமுக மற்றும் மதிமுக எம்.பிக்கள் இன்று டெல்லியில் பிரதமர்மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தனர்.

அதுகுறித்து அதிமுக எம்.பி. மலைச்சாமி கூறுகையில்,

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திமுக ஆட்சியாளர்கள்வெகுவாக குறைத்து விட்டனர். இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு தொடர வேண்டும் என்று பிரதமரிடம்வலியுறுத்தினோம்.

நிச்சயம் இதுதொடர்பாக பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார் என்றார்.

மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் கூறுகையில்,

வைகோவின் வீட்டுக்கு அருகே அடிக்கடி சிலர் வந்து கலாட்டா செய்கின்றனர்.தொலைபேசியில் பேசி வைகோவையும், அவரது மகனையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள்.

எனவே வைகோவுக்கு உயர் மட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம்கோரினோம். ஆவண செய்வதாக அவர் உறுதியளித்துள்ளார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+