இட ஒதுக்கீடு: டெல்லியில் பாமக பேரணி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தக்கோரி டெல்லியில் பாமக சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுடிவு செய்துள்ளதற்கு டெல்லி மருத்துவக் கல்லூரிமாணவர்கள், மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந் நிலையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று மறுபக்கம் ஆதரவுக்குரலும் வலுத்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் பாமக சார்பில் இன்று டெல்லியில்பாராளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்தப்பட்டது.
இப்பேரணியில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் பொன்னுச்சாமி, ஏ.கே.மூர்த்திஉள்ளிட்ட பாமக எம்.பிக்கள் உள்பட நூற்றுக்கணக்கான பாமகவினர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications