பிளஸ் டூ: மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க...
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிளஸ் 2 தேர்வில் மாணவ-மாணவிகள் தாங்கள் எதிர்பார்த்ததை விட குறைந்த மதிப்பெண் பெற்று இருப்பின்மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை இயக்குநர் ஜெகநாதன் தெரிவித்தார்.
2006ம் ஆண்டு மார்ச் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கணிதம், இயற்பியல், வேதியியல்,உயிரியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய பாடங்களுக்கு விடைத்தாள் நகல் கேட்டுவிண்ணப்பிக்கலாம்.மேலும் எந்த ஒரு பாடத்திலும் மதிப்பெண் மறுகூட்டல் வேண்டியும் விண்ணப்பிக்கலாம்.திருத்தப்பட்ட விடைத்தாள்களின் நகல்களை வாங்குவதற்கு ரூ.275ம், மறு கூட்டலுக்கு ஒரு பாடத்திற்கு ரூ.205ம்கட்ட வேண்டும். அதே போல் தமிழ், ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு ரூ.305 கட்ட வேண்டும்.
இவற்றிற்கான விண்ணப்பங்கள் 22ம் தேதி முதல் 26ம் தேதிவரை வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறைஇயக்குநர் ஜெகநாதன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications