சுதர்சனத்திடம் மன்றாடிய சிவனாண்டி!
சென்னை:
ஐபிஎஸ் அந்தஸ்தை ரத்து செய்து தன்னை எஸ்.பி. ஆக பதவி இறக்கம் செய்ததற்குஇடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற சிவனாண்டியின் கோரிக்கையை சென்னைஉயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
உளவுத்துறை டிஐஜியாக இருந்து வந்த சிவனாண்டி கடந்த 1994-95ம ஆண்டுஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான சீனியாரிட்டி பட்டியலில் சேர்க்கப்பட்டார். இதைஎதிர்த்து சில ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சிவனாண்டிக்கு வழங்கப்பட்ட சீனியாரிட்டியைரத்து செய்து, புதிய பட்டியலைத் தயாரிக்க உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து டிஐஜி அந்தஸ்திலிருந்த சிவனாண்டியை திமுக அரசுஎஸ்.பியாக பதவி இறக்கம் செய்து திருச்சி ஊர்க்காவல் படைக்கு தூக்கி அடித்தது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார் சிவனாண்டி.
அதில், என்னைப் பதவி இறக்கம் செய்த தமிழக அரசின் நடவடிக்கை மற்றும் மத்தியதீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடியும் வரை இந்தநடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
சிவனாண்டியின் மனுவை விசாரித்த நீதிபதிகள் பால் வசந்தகுமார், தமிழ்வாணன்ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டது.
மேலும் சிவனாண்டி மனு தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என்று கூறி மத்திய, மாநில அரசின் உள்துறைச் செயலாளர்களுக்குநோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சுதர்சனத்திடம் மன்றாடிய சிவனாண்டி:
காவலர் தேர்வு வினாத்தாள் லீக் ஆன விஷயத்தில் காவலர் ஜீவரத்தினம் மர்மமானமுறையில் இறந்தது தொடர்பாக சிவனாண்டி கைதாகலாம் என்று கூறப்படும்நிலையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பல வகைகளிலும் முயன்று வருகிறார்.
முதலில் அமைச்சர் ஆற்காடு வீராசாமியை சந்திக்கப் போனார். அவரை விரட்டிவிட்டார் ஆற்காடு.
இதையடுத்து சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனத்தை சந்தித்து உதவிகேட்டுள்ளார். உனக்கு உதவி செஞ்சா என்னை யார் காப்பாத்துறது என்று சொல்லிசிவனாண்டியை விரட்டியடித்துள்ளார் சுதர்சனம்.
இதைத் தொடர்ந்து நெஞ்சு வலி என்று சொல்லிக் கொண்டு அப்பல்லோமருத்துவமனையில் அட்மிட் ஆகச் சென்றார். அவரை அப்பல்லோ அட்மிட் செய்யமறுத்துவிட்டது.
இதையடுத்து தனது மனைவி டாக்டராகப் பணியாற்றும் மருத்துவமனையில் நெஞ்சுவலிக்காக அட்மிட் ஆகியுள்ளார் சிவனாண்டி.












Click it and Unblock the Notifications