இட ஒதுக்கீடு-எதிர்ப்பாளர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வீரமணி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 27 சதவீதம் இடம் கிடைக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவரவேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியது வரவேற்கத்தக்கது.
டெல்லி மருத்துவமனைகளில் பணியாற்றும் முன்னேறிய சாதியை சேர்ந்த டாக்டர்கள் பொறுப்பும்,மனிதாபிமானமும் இன்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை புறக்கணித்து வருவதால் மத்திய சுகாதாரத்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது சரியானது.
பிரதமர் வேண்டுகோளுக்கு கூட செவி சாய்க்காமல் கிளர்ச்சி செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிசட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை காட்ட வேண்டும் என்று வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications