எஸ்மா, டெஸ்மா ரத்து-பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்அரசு வேலையில் சேர கூடுதல் வயது வரம்பு:சென்னைக்கு மெட்ரோ ரயில்- ஆளுநர் உரை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 13வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையில்அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள் விவரம்:

- தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்து பெருமைப்படுத்தியுள்ளது மத்தியஅரசு. அதே போல தமிழை மத்தியில ஆட்சி மொழியாகவும் அறிவிக்க வேண்டும்.

- 3 ஆண்டுகளில் படிப்படியாக அனைத்துப் பள்ளிகளுக்கும் கம்ப்யூட்டர்கள்வழங்கப்படும்.

- திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.

- தொழில்கல்வி மாணவர் சேர்க்கை முறைப்படுத்தப்படும். பொது நுழைவுத் தேர்வுசுமையானதாக, செலவானதாக உள்ளது. நகர்ப்புற மாணவர்களுக்கும், கிராமப்புற,ஏழை குடும்ப மாணவர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்க, 2007-08 முதல் நுழைவுத்தேர்வு முறையை முற்றிலும் அகற்றிட தேவையான நடவடிக்கைகள் குறித்துபரிந்துரைக்க குழு அமைக்கப்படும்.

- பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ் கட்டாயப்பாடமாகிறது. இதுதொடர்பாக உள்ள இடையூறகைள களைய உரிய ஆணைபிறப்பிக்கப்படும்.

- மீண்டும் சட்ட மேலவை கொண்டு வரப்படும்.

- அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அடக்குமுறை சட்டங்களான எஸ்மா,டெஸ்மா ரத்து செய்யப்படுகிறது.

- சுயநிதிக் கல்லூரிகளில் பாடப் பிரிவுகள் பொது வகையாக மாற்றப்பட்டு மற்றபாடப் பிரிவுகளைப் போலவே கட்டணம் நிர்ணயிக்கப்படும். மருத்துவ, பொறியியல்படிப்புக் கட்டணம் குறைக்கப்படும்.

- பிளஸ்டூ மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடர்ந்துநிறைவேற்றுவோம்.

- கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை முறைப்படி ரத்து செய்வோம்.

- சுயமரியாதைத் திருமண சட்டத்தை தேசிய அளவில் செயல்படுத்த மத்திய அரசிடம்வலியுறுத்துவோம்.

-அரசுப் பணிகளில் சேர வயது வரம்பு 5 வருடம் அதிகரிக்கப்படும். கடந்த 5வருடமாக அரசுப் பணிகளுக்கு அதிமுக ஆட்சியில் ஆட்கள் சேர்க்கப்படாதால் இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் காலியாக உள்ள அரசுப் பணிகளை உடனேநிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

- 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை மேம்படுத்தி, அதை நிலமற்ற விவசாயிகளுக்குதலா 2 ஏக்கர் நிலம் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

-மெரீனா கடற்கரையில் சிவாஜி கணேசனுக்கு சிலை வைக்கப்படும்.

- இலங்கை தமிழர் பிரச்சினை அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படவேண்டும்.

- கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் நலனை நிலைநாட்டவும்,இன்னல்களைக் களையவும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

- மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்க கடந்த திமுகஆட்சியில் கொண்டு வரப்பட்ட பூமாலைத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.

- காவிரிப் பாசனப் பகுதி விவசாயத்திற்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர்அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

-வணிகர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.

- கன்னியாகுமரி கடலில் அய்யன் திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று காணபடகு போக்குவரத்து நவீனமாக்கப்படும்.

- கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதியை பள்ளிகளில் கல்வி வளர்ச்சிநாளாக விழா எடுக்கப்படும். அன்று முதல் சத்துணவுடன் வாரம் இருமுறை முட்டைவழங்கப்படும்.

-அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாளையொட்டி நடக்கும் முப்பெரும் விழாவில் இந்த ஆண்டு முதலேஏழைகளுக்கு கலர் டிவி வழங்கும் திட்டம் அமலாக்கப்படும்.

- குடும்ப அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் ஜூன் 3ம் தேதி முதல் 2 ரூபாய்க்குகிலோ அரிசி வழங்கப்படும். புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளவர்களுக்குமண்ணெண்ணை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

-சென்னையில் மக்கள் நெரிசலைப் போக்க நகருக்கு அருகே புதிய புறநகர்கள்அமைக்கப்படும். அதேபோல பிற மாநகராட்சிகளுக்கு அருகே புதிய புறநகரங்கள்உருவாக்கப்படும்.

- அரசுப் பள்ளிகளில் காண்ட்ராக்ட் முறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணிநிரந்தரமாக்கப்படும்.

-கண்ணகி சிலை அதே இடத்தில் ஜீன் 3ம் தேதி திறக்கப்படும்.

- பெண்களுக்கான மூவலூர் ராமாமிர்தம் மகளிர் திருமண உதவித் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும். இத் திட்டத்தின் கீழ் தரப்படும் நிதி ரூ. 15,000 ஆக உயர்த்தப்படும்.

-கூட்டுறவு சங்கங்களுக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.

-அனைத்து நகர்களிலும் பாதாள சாக்கடைத் திட்டம் உருவாக்கப்படும்.

- உழவர் சந்தைத் திட்டம் முந்தைய வாய்ப்பு வசதியுடன் மீண்டும் செயல்பட வழிவகை காணப்படும்.

- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.

-முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்றஉச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த தேவையான நடவடிக்கைமேற்கொள்ளப்படும்.

- ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டும் பணியைத் தடுக்கதேவையான நடவடிக்கை.

- தென்னக நதிகளை இணைக்கும் திட்டமே, தமிழகத்தின் நீராதாரப் பிரச்சினைக்குதன்மையான தீர்வாக இருப்பதால் அதை முதலில் செயல்படுத்த மத்திய அரசைவலியுறுத்துவோம்.

- பனைத் தொழிலாளர் நல வாரியம் மீண்டும் அமைக்கப்படும்.

- கிராமங்களில் வரும் முன் காப்போம் நோய் தடுப்புத் திட்டம் மீண்டும்செயல்படுத்தப்படும்.

- ஊரகப் பகுதிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேவையானகவனம் செலுத்தப்படும். முக்கியத் தெருக்கள் கான்க்ரீட் சாலைகளாக மாற்றப்படும்.கிராமங்களின் மையப் பகுதியில் சோடியம் ஆவி விளக்குகள் பொருத்தப்படும்.

- சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

- சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவில் மேற்கொள்ள மத்தியஅரசை வலியுறுத்துவோம்.

- சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

- மாநிலம் முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும்.

- மினி பஸ் திட்டம் மீண்டும் முழுமையான அளவில் விரிவாக செயல்படுத்தப்படும்.

- அனைத்து ஜாதியினரும் கோவில்களில் அர்ச்சகம் ஆகலாம் என்ற ஆணை உடனடியாக செயல்படுத்தப்படும்.இதற்காக பயிற்சி திட்டமும் கொண்டு வரப்படும்.

- அரசு மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும்

- வட சென்னை மற்றும் மேட்டூர் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிக்கப்படும்.

- மகளிர் சுய உதவிக் குழுக்களைப் போலவே இளைஞர் சுய உதவிக் குழுக்கள் துவங்கப்படும்

முன்னதாக, காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியது. ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலாஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். தமிழக அரசின் திட்டங்களை அவர் அறிவித்தார்.அதன் பின்னர் ஆளுநர் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பை சபாநாயகர்ஆவுடையப்பன் வாசித்தார். இந்த வழக்கம் ஜெயலலிதா ஆட்சியில்நிறுத்தப்பட்டிருந்தது நினைவுகூறத்தக்கது.31 வரை சட்டசபைக் கூட்டம்:

இந்த சட்டசபை கூட்டத் தொடர் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆளுநர் உரைமீது 3 நாட்களுக்கு விவாதம் நடைபெறுகிறது.

நாளை காலை மறைந்த உறுப்பினர்கள் 12 பேர் மீது இரங்கல் குறிப்பு கொண்டுவரப்படும். அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் உள்ளிட்ட மறைந்தஉறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவைக் கூட்டம் ஒத்திவைக்கப்படும்.

அதன் பின்னர் 26ம் தேதி சபை மீண்டும் கூடுகிறது. அன்றைய தினம் ஆளுநர் உரைமீது விவாதம் தொடங்கும். 29ம் தேதி வரை விவாதம் நடக்கும். 28ம் தேதி சபைநடைபெறாது. 30ம் தேதி விவாதத்திற்குப் பதில் அளித்து முதல்வர் கருணாநிதிபேசுவார்.

பின்னர் 31ம் தேதி பல்வேறு சட்ட முன் வடிவுகள் தாக்கல் செய்யப்பட்டுநிறைவேற்றப்படும். அத்துடன் கூட்டத் தொடர் முடிவடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+