ஒட்டப்பிடாரத்தில் அதிமுக-புதிய தமிழகம் அடிதடி

Subscribe to Oneindia Tamil

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே அதிமுகவினருக்கும் புதிய தமிழகம் கட்சியின் தொண்டர்களுக்கும் இடையே நள்ளிரவில் மோதல்மூண்டது. அது ஜாதிக் கலவரமாக வெடிக்காமல் தவிர்க்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டப்பிடாரம் அருகே முறம்பணில் கோயில் கொடைவிழா நடந்தது. கோயில் விழாவில் ஊர் மக்கள் பங்கேற்றிருந்தநிலையில் காளிமுத்து, பால்ராஜ், சேதுராமன், கிருஷ்ணன் ஆகியோரது வைக்கோல் படப்புகளுக்கு தீ வைக்கப்பட்டது. இவர்கள்அதிமுகவினர் என்று தெரிகிறது.

இதையடுத்து தூத்துக்குடியில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த தீ வைப்பு சம்பவத்துக்கு புதிய தமிழகம் கட்சியினரே காரணம் என புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்துஅதிமுகவினருக்கும் புதிய தமிழகம் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்டது. இரு தரப்பினரும் கை கலப்பில் ஈடுபட்டனர்.

இந்தச் சண்டையில் ஜாதியும் புகுந்தது. நிலைமை வேறு மாதிரியாக உருவெடுத்தையடுத்து மாவட்ட எஸ்.பி மகேஷ்குமார்அகர்வால் நேரடியாக சம்பவ இடத்துக்கு வந்து சென்று விசாரணை நடத்தினார்.

மேலும் மோதல் வெடிக்காமல் தடுக்க ஆயுதம் தாங்கிய போலீசாரும் நிறுத்தப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+