புதுவை: வைத்திலிங்கம் உள்பட 5 அமைச்சர்கள் 29ம் தேதி பதவியேற்பு

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

புதுவை மாநில முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் உள்ளிட்ட 5 பேர் வருகிற 29ம்தேதி அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

புதுவையில் 2வது முறையாக முதல்வர் பதவியை ரங்கசாமி ஏற்றுள்ளார்.அமைச்சரவைப் பட்டியலை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் அவர்முதல்வராகப் பதவியேற்றபோது அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.

இந்த நிலையில் புதுவை அமைச்சரவைப் பட்டியலை கட்சி மேலிடம் இறுதி செய்துவிட்டது. அதன்படி முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் அமைச்சராகிறார்.

அவர் தவிர வல்சராஜ், அங்காளன், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணராவ் ஆகியோரும்அமைச்சர்களாகின்றனர். புதிய அமைச்சர்கள் 29ம் தேதி பதவியேற்றுக்கொள்கிறார்கள்.

அவர்களுக்கு துணை நிலை ஆளுநர் லகேரா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஆரம்பத்தில் முதல்வர் ரங்கசாமியின் மருமகன் நமச்சிவாயத்தின் பெயரும்அமைச்சரவைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ஆனால் மல்லாடி கிருஷ்ணாராவ்ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் பலத்த சிபாரிசில் அமைச்சர் பதவியைப்பெற்றுள்ளார்.

இதனால் நமச்சிவாயம் அமைச்சர் பதவிக்கான வாய்ப்பை இழக்க நேரிட்டது.

புதிய சபாநாயகராக குருவிநத்தம் தொகுதி எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன்நியமிக்கப்படவுள்ளார். அவரும் அமைச்சர்கள் பதவியேற்பின்போது சபாநாயகராகபொறுப்பேற்கவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+