கைதிகள் தற்கொலையில் தமிழகம் முதல் இடம்!
சென்னை:
சிறையில் கைதிகள் தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் நாட்டிலேயே முதலிடம்வகிப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறைக் கைதிகளுக்கான மனித உரிமைகள் குறித்தும், அவர்களுக்கான மறு வாழ்வுபற்றி ஆராய்வதற்காகவும் மும்பையில் கடந்த 19ம் தேதி முதல் 21ம் தேதி வரைதேசிய அளவிலான மாநாடு நடந்தது.பல்வேறு தொண்டு நிறுவன அமைப்பினர், சிறை கண்காணிப்பாளர்கள்,வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுபேசினர்.
ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி சிறப்பு அழைப்பாளராக இதில் கலந்து கொண்டார்.
தமிழகத்தின் சார்பில் சென்னை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ்கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட பல்வேறு தகவல்கள்அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.
சிறையில் கைதிகள் தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தில்தான் அதிகம்நடப்பதாக இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. 2வது இடத்தை உத்திரப்பிரதேசம்பிடித்துள்ளது.
சிறையில் கைதிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கவும், சிறைக்கைதிகளுக்கான மறு சீரமைப்பு குறித்தும் பல்வேறு யோசனைகள் இந்த மாநாட்டில்தெரிவிக்கப்பட்டன.
சிறையிலிருந்தபடி படிக்கும் கைதிகளுக்கு உரிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.மன நலம் பாதித்த கைதிகளை சிறையில் அடைத்து சித்திரவதை செய்யாமல்மருத்துவமனையில் தரமான சிகிச்சை தரப்பட வேண்டும்.
பெண் கைதிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். கர்ப்பிணிகைதிகளுக்கு சிறையில் பிரசவம் பார்க்காமல் மருத்துவமனைகளில் அனுமதித்துபிரசவம் பார்க்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் மாநாட்டில்நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications