சட்ட மேலவை தேவையில்லாதது: திருமா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அண்ணாவால் தேவையற்றது என்று கூறப்பட்ட சட்டமன்ற மேலவை கொண்டுவரப்படும் என திமுக அரசு அறிவித்துள்ளது முரண்பாடாக உள்ளது என்று விடுதலைச்சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.

ஆளுநர் உரை குறித்து திருமாவளவன் கருத்து தெரிவிக்கையில்,

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ஆதரித்துதீர்மானம் நிறைவேற்றப்படும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் பழக்கம்ஒழிக்கப்படும், துப்புறவுத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பு,

நிலமற்றோருக்கு 2 ஏக்கர் நிலம், இலவச சைக்கிள் திட்டத்தை தொடர்ந்துசெயல்படுத்துவது என பல்வேறு வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்புகள் ஆளுநர்உரையில் இடம் பெற்றுள்ளது.

அதேசமயம், தலித் கிறிஸ்தவர்களின் நீண்ட நாளைய கோரிக்கையான இட ஒதுக்கீடுகுறித்த திமுக அரசின் நிலை குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இஸ்லாம்மதத்தைத் தழுவிய தலித்துகளின் நிலை குறித்தும் கூறப்படவில்லை.

அண்ணா வேண்டாம் என்று சொன்ன சட்டமன்ற மேலவையை மீண்டும் கொண்டுவருவோம் என்று திமுக கூறியுள்ளது முரண்பாடாக உள்ளது.

சட்டமன்ற மேலவையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுஅமல்படுத்தப்படுமா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. அதேபோல கூட்டுறவுசங்க தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா என்பது குறித்துதெரிவிக்கவில்லை.

கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட உழவர் பாதுகாப்புத் திட்டம்தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என்பதை சொல்லவில்லை.

வரவேற்புக்குரிய சில கொள்கைக் குறிப்புகள் ஆளுநர் உரையில் இருந்தாலும் கூட,தெளிவான அணுகுமுறை இல்லாத, குழப்பமும், மழுப்பலும் நிறைந்தஅறிக்கையாகவே ஆளுநர் உரை உள்ளது என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+