கோவில்களில் விஐபிக்களுக்கு பரிவட்டம் கட்ட தடை !
சென்னை:
இனி தமிழக ஆலயங்களில் விஐபிக்களுக்கு பரிவட்டம் கட்டுவதை அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் கருணாநிதிசட்டசபையில் அறிவித்தார்.
தமிழக சட்டசபை இன்று காலை கூடியதும், மறைந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் உள்ளிட்ட மறைந்த 12முன்னாள் எம்எல்ஏக்களுக்கும் இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.அந்தத் தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சியினரும் பேசிய பின்னர் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
மறைந்த பிடிஆர் ஒரு பண்பாளர். ஒளி மிகுந்த பெரும் குடும்பத்தின் துருவ நட்சத்திரமாக விளங்கினார். சபாநாயகராக இந்தஅவையை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினார்.
ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும், கோவில்களில் பெரியவர், சிறியவர், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுகூடாது என்பதில் பெரும் அக்கறை கொண்டிருந்தார்.
கோவில்களில் விஐபிக்களுக்கு பரிவட்டம் கட்டக் கூடாது என்று அரசுக்கு பரிந்துரை செய்தார். அதை நானும் ஏற்றுக்கொண்டேன். அந்த வழக்கம் பல ஆண்டுகள் வழக்கத்தில் இருந்தது. இடையில் அது மாறிப் போனது. பிடிஆரினி நினைவாகஏதாவது செய்ய வேண்டும் என்று இங்க பேசியவர்கள் குறிப்பிட்டார்கள்.
இனி ஆலயங்களில் விஐபிக்களுக்கு பரிவட்டம் கட்டக் கூடாது என்பதை பிடிஆர் நினைவாக இங்கு குறிப்பிடுகிறேன். இனிஅந்த முறையை அனுமதிக்க மாட்டோம் என்றார் கருணாநிதி.
இதையடுத்து மறைந்த உறுப்பினர்களுக்கு 2 நிமிட நேரம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது.
முன்பெல்லாம் கோவில் அறங்காவலர்கள், நிர்வாகிகள், பரம்பரை பங்குதாரர்கள், உபயதாரர்கள், மடாதிபதிகள்போன்றவர்களுக்கும் சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்தில் உள்ளவர்ளுக்கும் தான் பரிவட்டம் கட்டப்பட்டு வந்தது.
ஆனால், இப்போது பணக்காரர்கள், தொழிலதிபர்கள் என ஒருவரது பண வசதியைப் பார்த்து பரிவட்டம் கட்டப்பட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது. இவர்களைத் தவிர நடிகர்கள் என்று கூறிக் கொண்டு குண்டு கல்யாணத்தில் போன்றவர்களில் ஆரம்பித்து யார்வந்தாலும் பரிவட்டம் கட்டி விடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications