பல லட்சம் மோசடி-தில்லுமுல்லு தோழிகள் கைது
சென்னை:
வங்கியில் பல லட்சம் மோசடி செய்த தில்லுமுல்லு தோழிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மணலியைச் சேர்ந்த கவிதா ஜெயின், சுசித்ரா ஜெயின் ஆகிய இருவரும் பாங்க் ஆப் பரோடாவங்கியில் போலி ஆவணங்கள் கொடுத்து பல லட்சம் மோசடி செய்தனர்.
![]() |
| போலீஸ் காவலில் முகத்தை துப்பட்டாவால் மூடிக் கொண்டபடி சுசித்ரா-கவிதா |
ரயில்வேயில் ரூ. 1.5 கோடிக்கு காண்ட்ராட்க் எடுத்துள்ளதாக போலி ஆவணம் தயாரித்து வங்கியில் காட்டி கடன்பெற்று ஏமாற்றினர். இதையடுத்து வங்கி கொடுத்த புகாரின்பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டபோது இவர்கள் மீது பல காவல் நிலையங்களில் பல வகையான புகார்கள்இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த இருவரும் திருமணமாகாதவர்கள். ஒன்றாகவே தங்கியிருந்துள்ளனர்.
அண்ணாநகரில் ஒருவரிடம் 6.5 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக மத்தியக் குற்றப் பிரிவிடம் இவர்கள் மீதுபுகார் உள்ளது. மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி சேலையூரைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ. 8.5லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளனர்.
இந்த வழக்குகளில் போலீஸ் நடவடிக்கை ஆரம்பித்தவுடன் முன் ஜாமீன் பெற்று தப்பினர்.
சட்டக் கல்லூரி வளாகத்தில் மழை நீர் சேகரிப்புக் குழாய்களை திருடியதாகக் கூட இவர்கள் மீது புகார் உள்ளது.முதலில் சுசித்ராவின் வீட்டில் வேலைக்குத் தான் கவிதா சேர்ந்துள்ளார். பின்னர் இருவருமேதோழிகளாகிவிட்டனர். இருவரும் சேர்ந்தே மோசடிகளை செய்து பணம் ஈட்டி ஜாலியாக இருந்து வந்துள்ளனர்.













Click it and Unblock the Notifications