கருணாநிதிக்கு சிவாஜி குடும்பம் நேரில் நன்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை கடற்கரையில் வைக்கப்படும் என்ற தமிழகஅரசின் அறிவிப்புக்கு சிவாஜியின் குடும்பத்தினர் முதல்வர் கருணாநிதியை நேரில்சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
சட்டசபையில் ஆளுனர் ஆற்றிய உரையில், சிவாஜி கணேசனுக்கு கடற்கரையில்டிஜிபி அலுவலகத்திற்கு எதிரே முழு உருவச் சிலை அமைக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டது.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சிவாஜி குடும்பத்தினர் முதல்வர் கருணாநிதியைஅவரது இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு, சிவாஜியின் மைத்துனர்வேணுகோபால், சிவாஜியின் மகள்கள் தேன்மொழி, சாந்தி ஆகியோர் இந்தசந்திப்பின்போது உடன் இருந்தனர்.
சிவாஜி கணேசனின் மனைவி கமலா அம்மாள் கொடுத்து அனுப்பிய நன்றிக்கடிதத்தையும் அப்போது கருணாநிதியிடம் வேணுகோபால் கொடுத்தார்.












Click it and Unblock the Notifications