ஜெ. பாதுகாப்பு- டிஜிபி மீண்டும் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்புதொடர்பான முழு விவரங்களையும் டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான டிஜிபி அலுவலக செய்திக் குறிப்பு:

தமது வீட்டுக்கு 7 காவலர்கள் மட்டுமே பணியில் இருப்பதாகவும், வீட்டின்முன்புறமும், பின்புறமும் தலா ஒரு காவலர் மட்டுமே காவல் பணியில்இருப்பதாகவும், அவர்களிடம் நவீன ஆயுதங்கள் இல்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது உண்மைக்குப் புறம்பானதாகும்.

அதிமுக பொதுச் செயலாளருக்கு இசட் பிளஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படைபாதுகாப்புக்கு உரியவர் என்று நிர்ணயிக்கப்பட்ட விதிகளின்படி போதிய பாதுகாப்புவழங்கப்படுகிறது.

அதன் முழு விவரம்:

அதிமுக பொதுச் செயலாளரின் மெய் பாதுகாப்பு ஆய்வாளர் தகுதியில் 3 அதிகாரிகள்,9 எம்.எம். ரக துப்பாக்கியுடன் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.

கூடுதல் மெய் பாதுகாவலர்களுக்கு 3 காவலர்கள் ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவருடைய இல்லப் பாதுகாப்புக்கு 10 பேர் அடங்கிய காவல்துறையினர்,எஸ்.எல்.ஆர். வகை தானியங்கி துப்பாக்கிகளுடன் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.

வழிக்காவல் பாதுகாப்புக்கு (எஸ்கார்ட்) இரண்டு வாகனங்களுடன் (பொலிரோ ரக ஜீப்ஒன்றும், அம்பாசடர் கார் ஒன்றும்) 24 பேர் அடங்கிய காவல் அலுவலர்கள் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு 9 எம்.எம். பிஸ்டல் (2 பிஸ்டல்) மற்றும் எஸ்.எல்.ஆர். வகைதுப்பாக்கிகள் (6) வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு கவனிப்புப் பணியில் 3 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பார்வையாளர்களை திரேக பரிசோதனை செய்வதற்காக பகலில் 2 காவலர்களும்,இரவில் ஒரு காவலரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.இவர்களுக்கு திரேக பரிசோதனை செய்வதற்காக கையில் வைத்துக் கொள்ளக் கூடிய 3மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாளும், காலையில் இல்லம் மற்றும் வாகனங்களில் சதித் திட்டங்களைமுறியடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

12 பேர் அடங்கிய தேசிய பாதுகாப்புப் படையினர் 2 வாகனங்களில் எம்.பி. 5 நவீனத்துப்பாக்கியுடன் வழிக் காவல் பணியில் உள்ளனர்.

இதுதவிர அதிமுக பொதுச் செயலாளர் பொதுக் கூட்டங்கள் மற்றும் விழாக்களில்கலந்து கொள்ளும்போது தேவையான சட்டம் ஒழுங்கு பாதுகாப்புப் பணியைமேற்கொள்ளுமாறு மாநகர காவல்துறை ஆணையர்கள், மாவட்டக் காவல்கண்காணிப்பளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+