இட ஒதுக்கீடுக்கு எதிராக ஜிப்மர் டாக்டர்கள்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டமசோதாவை எதிர்த்து புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் உள்ளுறை டாக்டர்கள்(ரெசிடெண்ட் டாக்டர்ஸ்) மே 30ம் தேதி முதல் 48 மணி நேர வேலைநிறுத்தம்மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜிப்மர் உள்ளுறை டாக்டர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்,

பிற்பட்ட வகுப்பினருக்கு உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள்,டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஜிப்மர் மருத்துவமனை உள்ளுறைடாக்டர்கள் சங்கத்தைச் சேர்ந்த 300 டாக்டர்கள் மே 30ம் தேதி காலை 6 மணி முதல்ஜூன் 1ம் தேதி காலை 6 மணி வரை 48 மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடமுடிவு செய்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தால் ஜிப்மர் மருத்துவமனையின் வெளி நோயாளிகள் பிரிவு,அவசர சிகிச்சைப் பிரிவு, விபத்து சிகிச்சைப் பிரிவு ஆகியவை கடுமையாக பாதிக்கும்.

இதற்காக பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

டெல்லி மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள்,டாக்டர்களிடம் போலீஸார் கடுமையாக நடந்து கொள்வது வன்மையாககண்டிக்கத்தக்கது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தில் இளநிலை மருத்துவர் சங்கமும் சேர்ந்து கொள்ளும் என்றுஎதிர்பார்க்கப்படுவதால் ஜிப்மர் மருத்துவமனையின் செயல்பாடுகள் 2 நாட்களுக்குகடுமையாக பாதிக்கும் என்று தெரிகிறது.

தற்கொலை முயற்சி:

இதற்கிடையே ஒரிஸ்ஸாவில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஒரு மருத்துவ மாணவர் தற்கொலைக்கு முயன்றார். உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட அவர் காப்பாற்றப்பட்டார். அதே போல இன்னொரு மாணவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+