ஜெ. ஒரு ஜோன் ஆப் ஆர்க்: வைகோ ஜிங் சக்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சரித்திரத்தில் படித்த ஜோன் ஆப் ஆர்க், ஜான்சி ராணி ஆகியோரின் மறு உருவமாகஜெயலலிதா விளங்குகிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து வைகோ கூறியது:

ஜோன் ஆப் ஆர்க், ஜான்சி ராணி ஆகியோர் குறித்து சரித்திரத்தில் படித்தோம். இன்றுஜெயலலிதா அந்த காவியத் தலைவிகளின் மறு உருவமாக தோன்றுகிறார்.

துணிச்சலின் வலிமை, உறுதி அதனுடைய வடிவம்தான் ஜெயலலிதா. தனியாகசட்டசபைக்குச் சென்று முதல்வரையும், அமைச்சர்களையும், ஆளும் கட்சிக்குஆதரவான காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் அனாயசமாக சமாளித்து அத்தனைபேரையும் தனது கேள்விகளால் திணறடித்து விட்டு வந்துள்ளார்.

86 லட்சம் பேருக்கு தலா 2 ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டும் என்றால் 1.72 கோடிஏக்கர் நிலம் வேண்டுமே, எங்கே இருக்கிறது அது என்று அவர் கேட்ட கேள்விக்குமுதல்வரால் பதில் சொல்ல முடியவில்லை.

கையில் புள்ளி விவரக் கணக்கை எடுத்து வைத்துக் கொண்டு அதிரடியாகபேசியிருக்கிறார் ஜெயலலிதா.

விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதாக சொல்கிறீர்களே, ஏற்கனவே கடனைச்செலுத்திய விவசாயிகளுக்கு அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பீர்களா என்றகேள்விக்கும் முதல்வரிடமிருந்து பதில் இல்லை.

சரி, கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை மட்டும் தள்ளுபடி செய்கிறீர்களே,தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடனையும் தள்ளுபடி செய்வீர்களா,செய்ய வேண்டும் என்று கேட்டதற்கும் அவர்களிடமிருந்து பதில் இல்லை.

முதல்வர், அமைச்சர்கள், காங்கிரஸ் உறுப்பினர்களின் குறுக்கீடுகள் இருந்தும் அவர்கள்அத்தனை பேரையும் மிக அலட்சியமாக, அநாயசமாக எதிர்கொண்டு அவர்களின்கிண்டல் கேள்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் எதிர் கேள்விகள் கேட்டு அத்தனைபேரையும் திணறடித்துள்ளார்.

எனக்குத் தெரிந்து இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர்தனி நபராக சட்டசபையில் கேள்விகள் கேட்டு தல்வரையும், அமைச்சர்களையும் மற்றஉறுப்பினர்களையும் திணறடித்தது இதுவரை கேள்விப்பட்டிராத ஒரு சம்பவம் என்றுபாராட்டித் தள்ளியுள்ளார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+